Connect with us

இதை விட சிறப்பான ஒரு பெயர் வைக்க முடியாது.. தளபதி 69 Title Update..!

Tamil Cinema News

இதை விட சிறப்பான ஒரு பெயர் வைக்க முடியாது.. தளபதி 69 Title Update..!

Social Media Bar

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகி வரும் திரைப்படமாக தளபதி 69 திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம்தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் விஜய்யும் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த கடைசி திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்கி வருகிறார். எந்த ஒரு படம் எடுத்தாலும் அந்த படம் தொடர்பாக நிறைய விஷயங்களை ஆய்வு செய்து படத்தில் வைக்க கூடியவர் ஹெச்.வினோத்.

எனவே இந்த திரைப்படத்திலும் அப்படியாக அரசியல் சார்ந்து பல விஷயங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு நடுவே தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்தான் தளபதி 69 என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

thalapathy 69

thalapathy 69

அந்த படத்தில் ஸ்ரீ லீலா நடித்த கதாபாத்திரத்தில்தான் இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் இந்த வருடம் இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் படம் குறித்த அப்டேட் மாறியுள்ளது.

அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் தேர்தல் வருவதால் அதனை ஒட்டி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் விஜய் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே இந்த திரைப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என பெயரிட உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர் நாளைய தீர்ப்பு அதே பெயரையே இறுதி படத்துக்கும் வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவரது அரசியல் வருகைக்கும் இந்த பெயர் பக்காவாக பொருந்துகிறது.

ஆனால் இதுக்குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

 

Articles

parle g
madampatty rangaraj
To Top