Connect with us

நடிகராவே இருந்தாலும் வேண்டாம்.. விஜய் சால்வை போத்துவதற்கு மறுத்த மாணவி!..

vijay program

News

நடிகராவே இருந்தாலும் வேண்டாம்.. விஜய் சால்வை போத்துவதற்கு மறுத்த மாணவி!..

Social Media Bar

அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருபவர் தளபதி விஜய். இதனாலேயே மக்களுக்கு விஜய் மீது அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது.

விஜய் அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்த பிறகுதான் அரசியல் குறித்த பல விஷயங்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார். அதற்கு முன்பு வரை ஒரு நடிகர் மட்டும்தான் என்பதால் நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுக்காமல் இருந்தார்.

ஏனெனில் திரைப்படங்களில் அரசியல் பேசுவதற்கே அவருக்கு நிறைய எதிர்வினைகள் நடக்கத் துவங்கின. அதனால் பொறுத்து இருந்த விஜய் தனது கட்சியை துவங்கிய பிறகு தொடர்ந்து நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார்.

thalapathy-vijay1
thalapathy-vijay1

அரசியலுக்கு வந்த விஜய்:

ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் தொடர்ந்து கேள்வி கேட்க தயங்குவதில்லை நடிகர் விஜய். இந்த நிலையில் போன வருடம் ஆக்கபூர்வமான ஒரு விஷயத்தை விஜய் செய்திருந்தார் அதாவது அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தார் விஜய்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது போன வருடமே இதற்காக பலரும் விஜய்யை பாராட்டி இருந்தனர். இதை வருடா வருடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது விஜயின் ஆசையாக இருந்தது. அந்த வகையில் இந்த வருடமும் அதை நடத்தினார் விஜய்.

ஆனால் அதை இவரே தலைமை ஏற்று அனைவருக்கும் இவரே பரிசு பொருட்கள் கொடுத்து பொன்னாடை அணிவித்து அந்த விழாவை நடத்துவது தான் அதில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வருடம் மட்டும் இந்த விழா நடக்கும் போது நிறைய சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

மாணவியின் செயல்:

மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும்பொழுது அனைவருக்கும் சால்வை போர்த்தி விருது வழங்கி வந்தார் விஜய். அப்பொழுது ஒரு மாணவியின் தோளில் அவர் கையை போட்டதாகவும் அப்பொழுது அந்த மாணவி தோளிலிருந்து கையை எடுக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது.

அதே போல ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் மேடைக்கு வரும்பொழுது அவருக்கு சால்வை போர்த்த வந்த விஜய்யை நிறுத்தி சால்வையை கையில் கொடுக்கும் படி கேட்டு இருக்கிறார் அந்த பெண். அவருடைய உணர்வை மதித்து விஜயும் அந்த சால்வையை கையில் கொடுத்திருக்கிறார்.

இப்போதைய மாணவ மாணவிகள் பெரும் நடிகர்களாக இருந்தாலும் கூட தங்களுக்கான சில மரியாதை விஷயங்களை சரியாக பின்பற்றுவது பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது என்று இந்த நிகழ்வுகள் குறித்து ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இதனால் கோபத்தில் இருக்கின்றனர். எப்படி இருந்தாலும் நடிகர் விஜயை இந்த விஷயங்கள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விழாவை நல்லபடியாக நடத்தி இருக்கிறார்.

To Top