Cinema History
கமல் படத்துல தக்காளி சோறு! – என் குழுவுக்கு கறி சோறு போடு, மாஸ் காட்டிய விஜயகாந்த்!
தமிழ் திரைத்துறையில் விஜயகாந்த் என்றாலே பலருக்கும் பெரும் மதிப்பு வரும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா துறையில் பலருக்கும் நன்மையை புரிந்த வாரி வழங்கியவர் நடிகர் விஜயகாந்த்.
எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி இப்போது இருக்கும் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் வரை ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது எனில் ஹீரோக்களுக்கு தனி சாப்பாடு,லைட்ஸ் மேன்களுக்கு தனி சாப்பாடு என்கிற நடைமுறைதான். ஹீரோக்களுக்கு நல்ல காஷ்ட்லியான சாப்பாடு கொடுப்பார்கள். கடைநிலை ஊழியர்களுக்கு சாதரண ஹோட்டல் சாப்பாடு வழங்கப்படும்.
தமிழ் சினிமாவில் அதை முதன் முதலாக அதை மாற்றி அமைத்தவர் நடிகர் விஜயகாந்த். ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உணவுதான் தனக்கும் அளிக்கப்பட வேண்டும் என கூறி ஊழியர்களுடன் அமர்ந்து சாப்பாடு சாப்பிடுபவர் விஜயகாந்த்.
அதுவும் சாதரண சாப்பாடு கிடையாது. அசைவ உணவுதான் அனைவருக்கும் போட வேண்டும். அதுவும் அன்லிமிடெடாக போட வேண்டும் என கூறியிருந்தார். அந்த சமயத்தில் ஒரு இயக்குனர் சார் படமே லோ பட்ஜெட் இதுல எப்படி சார் தினமும் வேலை பாக்குறவங்களுக்கு அசைவ சாப்பாடு போட முடியும் என கேட்டுள்ளார்.
உடனே விஜயகாந்த் எல்லோருக்கும் அசைவ சாப்பாடு போட மொத்தமா எவ்வளவு ஆகும் என கேட்டுள்ளார். 3 லட்ச ரூபாய் ஆகும் சார் என கூறியுள்ளார் இயக்குனர். உடனே விஜயகாந்த் “அந்த மூணு லட்சத்த என் சம்பளத்துல கழிச்சிக்கோங்க” என கூறிவிட்டார்.
விஜயகாந்தின் உழவன் மகன் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் சென்றுக்கொண்டிருந்தபோது அதற்கு பக்கத்து ஷெட்டில் கமல்ஹாசன் நடிக்கும் நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டிருந்தன.
அப்போது நாயகன் படப்பிடிப்பு தளத்தில் வேலையாட்கள் அனைவரும் தக்காளி சாதமும், தயிர் சாதமும் சாப்பிட்டு கொண்டிருக்க விஜயகாந்த் ஷெட்டில் அனைவரும் கறி விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்