கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகலை அதுக்குள்ளவா!.. அலப்பறை கிளப்பும் தளபதி ரசிகர்கள்!..
Actor Vijay : பொதுவாக தாங்கள் விரும்பும் நடிகர்கள் கட்சி துவங்கினால் அதிக ரசிகர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகதான் இருக்கும் ஆனால் விஜய் கட்சி தொடங்கி இருப்பது மட்டும் தற்சமயம் அவரது ரசிகர்களுக்கு ஒரு தூக்கமான செய்தியாக மாறிவிட்டது என்று கூறலாம்.
ஏனெனில் விஜய் முதலில் கட்சி துவங்க இருப்பதாக கூறிய போது அவர் சினிமாவை விட்டு விலகுவதாக இருப்பதை கூறவே இல்லை. எனவே அரசியலுக்கு வந்தாலும் கூட விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பார் என்று அவரது ரசிகர்கள் நினைத்து வந்தனர்.

தெலுங்கு மலையாளம் போன்ற சினிமாக்களில் கட்சி துவங்கி நடத்தி வரும் நடிகர்கள் கூட சினிமாவில் நடித்து வருகின்றனர். அப்படி விஜய்யும் சினிமாவில் நடித்துக் கொண்டே கட்சியை நடத்துவார் என்று நினைத்து வந்த நிலையில் இனி படங்கள் ஏதும் நடிக்கப் போவதில்லை.
தற்சமயம் கமிட்டாகி இருக்கும் திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என விஜய் கூறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அவரின் அரசியல் பாதையை வரவேற்று அவருக்காக கை தூக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்னமும் விஜய்யின் கட்சிக்கான கொடி சின்னம் போன்றவை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே விஜய் ரசிகர்கள் தங்களது வண்டிகளில் தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரை ஸ்டிக்கராக ஒட்டிக்கொண்டு சுற்ற துவங்கி இருக்கின்றனர் இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங்காகி வருகிறது.