கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன்!.. கோடு போட்டு நடித்த தமிழ் நடிகர்கள்!..

சினிமாவில் நடிக்கும் சிலர் நடிகர், நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு தனித்திறமை வைத்துக் கொள்வார்கள். மேலும் தற்பொழுது சினிமாவில் பல அட்ஜஸ்மெண்டுகள் போன்ற பேச்சுகள் அடிபட்டு வந்தாலும் ஒரு சில நடிகைகள் அதற்கு எதிராக இருக்கிறார்கள்.

மேலும் அது குறித்து பேட்டிகளிலும் தற்போது தைரியமாக பேசி வருகிறார்கள். இந்நிலையில் கவர்ச்சியாக, ஆபாசமான காட்சிகளில் தங்கள் நடிக்க மாட்டோம் என ஒரு சில நடிகைகள் தங்களுக்குள்ளாகவே சில வரைமுறைகளை வைத்து நடித்துக் கொண்டிருப்பதும் வழக்கம் தான்.

பல நடிகைகள் அவ்வாறு கவர்ச்சி காட்டாமல் சாதித்தும் உள்ளார்கள். இந்நிலையில் நடிகைகளை போல சில நடிகர்களும் கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் ஒரு சில விஷயங்களை சினிமாவில் செய்ய மாட்டேன் என கூறி இருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு சில விஷயங்களை மறுத்த நடிகர்கள்

இந்த வரிசையில் முதலாவதாக இருப்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இவர் நடிகர் மட்டுமல்லாமல் அரசியலிலும் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு பல உதவிகளை செய்தவர். இவருக்கு தற்பொழுது வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக வாழ்ந்து சென்றவர். இவர் சினிமாவில் கோடி கணக்கில் பணம் கொடுத்தாலும் ஒரு சில விஷயங்களை செய்ய மாட்டேன் என கூறி அதன்படி நடித்து வந்திருக்கிறார். அந்த வகையில் இவர் புகை படிப்பது போன்ற காட்சி, மது குடிப்பது போன்ற காட்சி எதிலும் இவர் நடித்திருக்க மாட்டார். மேலும் அனைவருக்கும் பிடித்த நடிகர் ராமராஜனும் எந்த ஒரு திரைப்படத்திலும் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்திருக்க மாட்டார்.

mgr
Social Media Bar

அடுத்ததாக உள்ள நடிகர் சத்யராஜனின் மகன் சிபிராஜ். இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகளில் இவர் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருக்கிறார். அதன்படி ஹீரோயின்களுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என இவர் தெரிவித்திருக்கிறார். அதற்கான காரணம் என்னை பார்த்து என் மகன் கெட்டு விடக்கூடாது என்பதற்காக நான் இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Vijayakanth

அடுத்ததாக பார்க்க இருப்பது கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் நல்ல மனிதராக வாழ்ந்து சென்றவர் இவர். இவருக்கு கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் தான் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் இவருடன் கவுண்டமணி செந்தில் போன்ற எந்த ஒரு நடிகரும் தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடித்ததில்லை.