வரி செலுத்தலையான நடவடிக்கை எடுப்போம்! –  ஐஸ்வர்யாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உலக அழகியாக அனைவரிடமும் அறிமுகமாகி அதன் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் அதிகமாக ஹிந்தி சினிமாவில் படங்கள் நடித்துள்ளார் என்றாலும் கூட 2000 காலக்கட்டத்தில் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த ஜீன்ஸ், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. வெகு நாட்களுக்கு பிறகு எந்திரன் திரைப்படத்தில் நடித்தார். தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அப்படியாக மராட்டிய மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னார் என்னும் பகுதியில் ஐஸ்வர்யா ராய்க்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்திற்கு கடந்த ஆண்டிற்கான நில வரியை அவர் இன்னும் கட்டவில்லை என கூறப்படுகிறது.

மொத்தமாக அந்த நிலத்திற்கான நில வரியான 21 ஆயிரத்து 960 ரூபாயை கட்ட சொல்லி பல முறை அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அவர் கட்டாத நிலையில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது மராட்டிய அரசாங்கம்.

எச்சரிக்கை கடிதம் பெற்று 10 நாட்களுக்குள் வரி தொகையை கட்டாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது அரசாங்கம்.

Refresh