News
பீரியட்ஸ் ஒன்னும் மோசமானது இல்ல.. வெளிப்படையாக பேசிய கமல் மகள்!.
Akshara Haasan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். சினிமா பயணத்தில் தன்னுடைய 65 ஆண்டுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்த கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி நடிகராக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவருமே சினிமாவில் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருடைய இளைய மகளான அக்ஷரா ஹாசன் தமிழில் ஒரு சில படங்களிலும், மற்ற மொழிகளில் ஒரு சில படங்களிலும் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அக்ஷரா ஹாசன் தற்போது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பற்றி கூறியிருக்கும் செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை அக்ஷரா ஹாசன்
தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அக்ஷரா ஹாசன். இவர் தமிழில் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அக்ஷரா ஹாசன் முதன் முதலில் தனுசுக்கு ஜோடியாக ஷமிதாப் என்னும் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அக்ஷரா ஹாசன் திரையுலகில் குறைந்த படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் ஷமிதாப், லாலி கி ஷாதி மே லாடூ தீவானா, விவேகம், கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மாதவிடாய் பற்றி நடிகை அக்ஷரா ஹாசன் கூறியிருப்பது
சமீபத்தில் பேட்டில் ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன் பெண்களுக்கு ஏற்படும் பீரியட்ஸ் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறும் போது பெண்களுக்கு ஏற்படும் பீரியட்ஸ் அபிஷ்டு இல்லை. இதன் மூலமாகத்தான் உலகில் உயிர்கள் வருகிறது. ஆனால் இதனை ஒரு சிலர் தீட்டு என்று சொல்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயில் நல்லதை தான் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் புரிதல் இல்லாமல் தவறாக பார்க்கிறார்கள். இது பார்ப்பவர்களின் பார்வை தவறாக இருக்கிறது என அக்ஷரா ஹாசன் கூறியிருக்கிறார். தற்போது இவரின் இந்த பேட்டி அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது. மேலும் இவரின் ரசிகர்கள் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.
