முன்ன மாதிரி இப்ப இல்ல.. போட்டோ ஷூட் வெளியிட்டு நிரூபித்த நடிகை அனிகா..!
சிறு வயது முதலே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் நடிகை அனிகா சுரேந்திரன். நயன் தாரா த்ரிஷா மாதிரியான பெரிய நடிகைகளுக்கு எல்லாம் இவர் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அனிகாவிற்கு என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அனிகா தொடர்ந்து அடுத்து விஸ்வாசம் திரைப்படத்திலும் நடித்தார். இந்த நிலையில் அடுத்து கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அதுவரை க்யூட் லுக்கில் நடித்து வந்த அனிகா முதல் படத்திலேயே அதிக கவர்ச்சியில் எண்ட்ரி கொடுத்தார்.
அந்த வகையில் அவர் நடித்த ஓ மை டார்லிங் என்கிற படத்தில் படம் முழுக்க முத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என இடம் பெற்றிருந்தது. அந்த படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி அனிகாவின் மார்க்கெட்டையே முடித்துவிட்டது.
அதற்கு பிறகுதான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டார் அனிகா. அப்படியாக அடுத்து அவர் நடித்த திரைப்படம் பிடி சார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் அடுத்து அவர் நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் கூட வரவேற்பை பெற்றுள்ளது.
இவற்றை தொடர்ந்து இதுவரை கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்த அனிகா அதிலும் கூட மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். தற்சமயம் பாவாடை தாவணியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.