Connect with us

மூன்று நடிகர்கள் சேர்ந்து தூக்கும்போது அப்படி இருந்துச்சு… அனுபவத்தை பகிர்ந்த நடிகை அனுயா..

vijay anuya

News

மூன்று நடிகர்கள் சேர்ந்து தூக்கும்போது அப்படி இருந்துச்சு… அனுபவத்தை பகிர்ந்த நடிகை அனுயா..

Social Media Bar

சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பு பெற்று பிறகு சில நாட்களிலேயே காணாமல் போன நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அனுயா.

தமிழில் ஜீவா சந்தானம் இணைந்து நடித்த சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். சிவா மனசுல சக்தி திரைப்படம் அப்போது இருந்து இப்போது வரை பெரிதாக வரவேற்பு பெற்ற படமாக இருக்கிறது.

அதற்கு பிறகு அந்த அளவிற்கு ஒரு காமெடி திரைப்படம் என்பது ஜீவா சந்தானம் காம்போவில் திரும்ப உருவாகவில்லை என்றுதான் கூற வேண்டும் இது அதிக வரவேற்புகளை பெற்று கொடுத்தது.

அனுயா பிரபலம்:

ஆனால் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு அனுயா காணாமல் போய்விட்டார். அவருக்கு திரை துறையில் வாய்ப்புகள் என்பதே கிடைக்கவில்லை. பிறகு மிக தாமதமாக விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அக்கா கதாபாத்திரமாகவே இருந்தாலும் படத்தில் சாதாரண துணை கதாபாத்திரமாக இல்லாமல் முக்கியமான கதாபாத்திரமாக அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. சத்யராஜின் மனம் மாறுவதற்கான முக்கியமான கதாபாத்திரமாகவே இவர்தான் இருந்திருப்பார்.

இந்த நிலையில் நண்பன் திரைப்படத்தில் நடித்த பின் தனக்கு சினிமா துறை எவ்வளவு வாய்ப்புகளை கொடுத்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அனுயா.

நண்பன் பட அனுபவம்:

அதில் அவர் கூறும்பொழுது நண்பன் படத்தின் போது மூன்று நடிகர்கள் என்னை தூக்கிட்டு வரும்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் விஜய்யை அடிக்கும் காட்சிக்காக நான் கொஞ்சம் பயந்தேன். மெதுவாக நான் அந்த காட்சியில் அடித்த பொழுது வேகமாக என்னை அடியுங்கள் என்று கூறினார் விஜய் என்று பகிர்ந்திருந்தார்.

மேலும் அவர் கூறும் பொழுது நண்பன் படத்திற்கு பிறகு எனக்கு தொடர்ந்து அக்கா கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு அந்த கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு விருப்பமில்லை இருந்தாலும் நண்பன் படத்தில்  நடித்த பிறகு அக்கா அல்லது அம்மா கதாபாத்திரத்திற்குதான் நான் சரியாக இருப்பேன் என்று பலரும் நினைக்கத் துவங்கி விட்டனர் என்று கூறியிருக்கிறார்.

To Top