Connect with us

15 வயசுலையே காசுக்காக தயாரிப்பாளர்க்கிட்ட போய் நின்னேன்!. விபத்தில் சிக்கி மூளை அடிப்பட்டுட்டு!.. நடிகைக்கு நடந்த கொடுமைகள்!..

asritha-sridas

News

15 வயசுலையே காசுக்காக தயாரிப்பாளர்க்கிட்ட போய் நின்னேன்!. விபத்தில் சிக்கி மூளை அடிப்பட்டுட்டு!.. நடிகைக்கு நடந்த கொடுமைகள்!..

Social Media Bar

சினிமாவை பொறுத்தவரை அதில் வாய்ப்பு வாங்குவதுதான் பலருக்கும் பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் சிலருக்கு வாய்ப்பு கிடைத்த பிறகும் கூட அவ்வளவாக வாழ்க்கை சுமூகமாக இருப்பது கிடையாது.

சின்ன வயது முதலே சீரியல்களில் நடித்து வரும் நடிகை அஸ்ரித்தா ஸ்ரீதாஸ். இவர் சிறு வயது முதலே சின்ன திரையில் நடித்து வருகிறார் நாகேஷ் பொன்வண்ணன் நடித்த சீரியல் ஒன்றில் 1997 இல் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது அவர் பட்ட கஷ்டங்களை கூறியுள்ளார். இவர் சிறு வயதாக இருக்கும்போதே தனது தந்தையை இழந்துவிட்டார். இதனால் சிறு வயது முதலே இவருக்கு நிறைய பொறுப்புகள் இருந்தது.

asritha-sridas

ஒருமுறை அவரது அண்ணனுக்கு தேர்வுக்கு பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அஸ்ரித்தா அப்போது ஒரு நாடகத்தின் தயாரிப்பாளரிடம் சென்று பணம் பெற்று தனது அண்ணனுக்கு கொடுத்துள்ளார் அஸ்ரித்தா. சிறு வயதிலேயே அவ்வளவு பொறுப்புகளை சுமந்தேன் என அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் நான்கு வருடங்கள் முன்பு இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி அவரது மூளையில் அடிப்பட்டது. இதனால் அவர் பழைய விஷயங்களை எல்லாம் மறந்து போனார். மேலும் அவர் எழுந்து நடப்பதே சிரமம் என்கிற நிலை இருந்து வந்தது.

அப்படிப்பட்ட நிலையிலும் போராடி ஒரு மாதத்தில் மீண்டும் சகஜ நிலைக்கு வந்த அஸ்ரித்தா இப்போதும் கூட பழைய விஷயங்களை நினைவு கூற முயற்சி செய்தால் தலைவலி ஏற்படுகிறது என கூறுகிறார்.

To Top