News
10 ஆவது படிக்கும்போதே அந்த சம்பவம் நடந்துச்சு!.. நடிகை கேப்ரியல்லாவிற்கு நடந்த சோகம்..!
சின்னத்திரையில் வெகு காலங்களாகவே நடித்து வருபவர் நடிகை கேப்ரியல்லா. சிறு வயதில் இருந்தே இவர் விஜய் டிவியில் இருந்து வருகிறார். ஒருவருக்கு விஜய் டிவி செட் ஆகிவிட்டது என்றால் அவர்கள் பல காலங்களுக்கு விஜய் டிவியிலேயே இருந்து வருவார்கள்.
நடிகை கேப்ரியல்லாவும் அப்படிதான் இருந்து வருகிறார். விஜய் டிவியில் முதன் முதலாக நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட கேப்ரியல் அதன் பிறகு அதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பான ஒரு தொடரில் கூட இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு நடந்த சம்பவம் ஒன்றை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார் கேப்ரியல்லா. அதில் அவர் கூறும்போது நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் போன் கிடையாது. இந்த நிலையில் யாரோ என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டனர்.
புதிதாக அந்த புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு அது நான் என்றுதான் தோன்றும். இதனால் நான் 3 நாட்களுக்கு பள்ளிக்கே செல்லவில்லை. பள்ளியில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த சமயத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என கூறும் கேப்ரியல்லா அதிலிருந்து மீண்டு வர நாட்களானது என கூறுகிறார்.
