Connect with us

இதுக்கு மேல சினிமாவுல இருக்க மாட்டேன்! இளம் நடிகை துஷாரா விஜயன் அறிவிப்பு! – என்ன காரணம் தெரியுமா?

Tamil Cinema News

இதுக்கு மேல சினிமாவுல இருக்க மாட்டேன்! இளம் நடிகை துஷாரா விஜயன் அறிவிப்பு! – என்ன காரணம் தெரியுமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஹிட் அடித்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் அதே பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’ படத்தில் இவர் நடித்த ரெனே கதாப்பாத்திரத்திற்காக பலரால் விமர்சிக்கவும் பட்டார்.

ஆனால் அதன் பின்னர் வந்த கழுவேத்தி மூர்க்கன், அநீதி படங்களில் இவர் நடித்த பாத்திரங்கள் மூலமாக நல்ல பெயரையும் பெற்றார். தற்போது தொடர்ந்து ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’, தனுஷின் ‘ராயன்’ விக்ரம் நடித்து வரும் ‘வீரதீர சூரன்’ உள்ளிட்ட பெரிய ஸ்டார் படங்களில் துஷாரா விஜயன் நடித்து வருகிறார்.

dhusara-vijayan
dhusara-vijayan

இந்த படங்கள் வெளியான பிறகு துஷாராவின் மார்க்கெட் உச்சம் சென்று விடும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில்தான் தனது சினிமா பயணத்தை முடித்துக் கொள்வது குறித்து துஷாரா விஜயன் கூறியுள்ளார். ராயன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “என்னுடைய 35 வயது வரை நான் சினிமாவில் நடிப்பேன். அதன்பிறகு திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன். 35 வயதிற்கு பிறகு சுற்றுப்பயணங்கள் நிறைய செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை” எனக் கூறியுள்ளார்.

பல அறிமுக நடிகைகளும் முதல் சில படங்களுக்கு பிறகு பெரிதாக படம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து ஸ்டார் நடிகர்களுடன் படம் கமிட்டாகி வரும் துஷாரா விஜயன் தனது சினிமா ஓய்வு குறித்து இப்போதே பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Top