Connect with us

கண்ணீர் விட்டு அழுதாலும் விட மாட்டாரு!.. இயக்குனர் குறித்து பகிர்ந்த நடிகை இந்துஜா

Actress Indhuja

News

கண்ணீர் விட்டு அழுதாலும் விட மாட்டாரு!.. இயக்குனர் குறித்து பகிர்ந்த நடிகை இந்துஜா

Social Media Bar

Actress Indhuja: தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்து, அதன் பிறகு அவர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்து தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விடுகிறார்கள். ஒரு சிலர் இணையதளங்களின் வீடியோக்கள் பதிவிட்டு அதன் மூலம் வைரலாகி பட வாய்ப்புகள் கிடைக்கிறது. சிலர் குறும்படங்கள் நடித்ததன் மூலம் வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித் திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் இன்று பிரபலமாக இருக்கக்கூடியவர் இந்துஜா ரவிச்சந்திரன். குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி, தமிழ் சினிமாவிற்குள் என்ரி கொடுத்தார். தற்போது இவர் பிரபல இயக்குனர் ஒருவரை பற்றி பகிர்ந்திருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் “மேயாத மான்” இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடிைகயாக அறிமுகமானார். அதே படத்தில் இந்துஜாவும் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் ஒன்று கொடுக்கப்பட்டது. சுடர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Indhuja

அதன் பிறகு “மெர்குரி, பிகில், பார்க்கிங்” ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றார்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்து வரும் இந்துஜா வேலூரில் பிறந்த பெண். கல்லூரி காலங்களில் இருந்து சிறு சிறு குறும்படங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் தற்போது நிலைத்து நிற்கிறார்.

மேலும் “மேயாத மான்” திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

பிரபல இயக்குனரை பற்றி இந்துஜாவின் கருத்து

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். செல்வராகவனை பற்றி இந்துஜா கூறும் போது செல்வராகவன் போன்ற ஒரு இயக்குனரை நான் பார்த்தது கிடையாது. ஏனென்றால் ஒரு காட்சியை படமாக்கும் முன்பு அதனை அப்படியே அவர் நடித்துக் காண்பிப்பார். மேலும் அந்த காட்சிக்காக சில சமயங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுதும் நடித்துக் காட்டுவார்.

அந்த காட்சி எந்த அளவுக்கு தத்ரூபமாக வர வேண்டுமோ, அந்த அளவு அந்தக் காட்சியை நாம் அவர் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும். சில சமயங்களில் ஒத்திகை பார்க்கும் போது அந்த காட்சி சரியாக வர வேண்டும். இல்லையென்றால் நாம் கண்ணீர் விட்டு அழுதால் கூட அவர் விடமாட்டார்.

அப்போதுதான் அவர் அந்த காட்சியை படமாக்க டேக் சொல்லுவார். என செல்வராகவன் பற்றிய தன்னுடைய கருத்தை இந்துஜா பதிவு செய்திருக்கிறார்.

To Top