Cinema History
அழுகை வரலைன்னு பாட்டில் பாட்டிலா க்ளிசிரனை ஊத்துனாங்க!.. லவ் டுடே நடிகையை படுத்தி எடுத்த இயக்குனர்…
Actress Ivana: கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் எளிதாக பிரபலமாகி விட முடியும். ஆனால் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் அவ்வளவு எளிதில் பிரபலமாகி விட முடியாது. அதுவும் முந்தைய காலங்களில் இணையதளம் சமூக வலைதளங்கள் போன்றவை இல்லாத காலகட்டங்களில் நடிகைகள் பிரபலமாவது கடினமான விஷயமாக இருந்தது.
ஆனால் இப்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றனர் கதாநாயகிகள். மேலும் நடிகைகள் ஏதேனும் ஒரு படத்தில் பெரும் வெற்றியை கொடுத்து விட்டாலே அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர துவங்கி விடுகின்றன.

அந்த வகையில் லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை இவானா பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் லவ் டுடே திரைப்படத்தில் நடந்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பொதுவாக இவானவிற்கு அழுகையை வராதாம் கண்ணில் அவருக்கு தண்ணீர் வராதாம். அழுகையே வந்தால் கூட கண்ணில் அவ்வளவாக தண்ணீர் வராது.
இதனை அறிந்து அவருக்கு கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கிளிசரின் தடவ முடிவு செய்துள்ளனர். ஆனால் பொதுவாக க்ளிசரினை ஒரு ஏர் பட்ஸில் தடவி கண்ணில் கொஞ்சமாக தடவுவார்கள். அதற்கே அனைவருக்கும் கண்ணீர் வந்துவிடும்.
ஆனால் அப்படி தடவியும் இவானாவிற்கு கண்ணீரே வரவில்லை. அதை பார்த்துவிட்டு படகுழுவினர் க்ளிசரினை எடுத்து நேராக கண்ணில் சொட்டுக்களாக விட துவங்கியுள்ளனர். இதை பார்த்த இயக்குனர் ஐ ட்ராப்ஸை விட்டால் எப்படி கண்ணில் தண்ணீர் வரும் என்று கேட்டுள்ளார்.
கிளிசரினைதான் ஐ ட்ராப்ஸ் போல விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இயக்குனருக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார் இவானா. அதற்குப் பிறகுதான் அவருக்கு கண்ணில் தண்ணீர் வந்ததாம்.
