News
இந்துக்கள் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்க!.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட நடிகை!..
Actor Vijay : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகராக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தற்சமயம் அரசியலில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் கஸ்தூரி விஜய்யின் அரசியல் குறித்து பேசும்பொழுது அதில் சர்ச்சை கிளப்பும் விதமாக பல விஷயங்களை பேசி இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது சினிமாவில் நடிகர்களை பார்த்து அவர்களுக்கு ரசிகர்களாகும் மக்கள் அரசியலில் ஓட்டு போட மாட்டார்கள். அப்படி ஓட்டு போடுவார்கள் என்றால் விஜயகாந்த் எப்பொழுதோ முதலமைச்சர் ஆகி இருப்பார்.

கமலும் கூட இப்பொழுது அரசியலில் பெரிய இடத்தில் இருந்திருப்பார் ஆனால் உண்மையில் அப்படி எல்லாம் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். அதையும் தாண்டி தமிழ்நாட்டில் காவி கொள்கை உடையவர்கள் யாரும் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று அழுத்திக் கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
இப்படி மத ரீதியாக விஜய்யை அடையாளப்படுத்தி அவரது ஓட்டை பிரிக்க பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு மத ரீதியான வெறி என்பது மக்கள் மத்தியில் அவ்வளவாக இல்லாத பொழுது தமிழ்நாட்டு மக்களை காவி கொள்கை உடையவர்கள் என்று குறிப்பிடுவதும் தவறு என்பது நெட்டிசன்களின் வாதமாக இருக்கிறது.
மேலும் கஸ்தூரி பேசும் பொழுது பாஜகவிற்கு விஜயால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. விஜய் காங்கிரஸ் திமுக மாதிரியான மைனாரிட்டி மக்களுக்கான கட்சியின் மீதுதான் கவனம் செலுத்துகிறார் அதனால் அவர்களுக்குதான் விஜயாள் பிரச்சனை இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி. இந்த நிலையில் நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
