Connect with us

ராஷ்மிகா ஸ்ரீ லீலாவை ஓரங்கட்டிய நடிகை.. இது புது டுவிஸ்டா இருக்கே..!

Tamil Cinema News

ராஷ்மிகா ஸ்ரீ லீலாவை ஓரங்கட்டிய நடிகை.. இது புது டுவிஸ்டா இருக்கே..!

Social Media Bar

இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு நடிகைகள் எல்லாம் வெகு சீக்கிரத்திலேயே அதிக பிரபலமடைந்து விடுகின்றனர். ஆனால் எவ்வளவுக்கு வேகமாக பிரபலமடைகிறார்களோ அதே வேகத்திற்கு அவர்களின் மார்க்கெட்டும் குறைந்துவிடுகிறது.

வேறு நடிகைகள் வந்து வெகு சீக்கிரத்திலேயே அந்த மார்க்கெட்டை பிடிப்பதற்கான வாய்ப்புகளும் அமைந்து வருகின்றன. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்து வந்தார்.

கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகாவுக்கு அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவில்தான் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின.

rashmika

rashmika

இதற்கு நடுவேதான் நடிகை ஸ்ரீ லீலா தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீ லீலாவின் சிறப்பான நடனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ லீலா அதிக பிரபலமடைந்தார். இப்போது தமிழில் கூட இவர் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் பிரபலமாகி வருகிறார் நடிகை கெத்திகா ஷர்மா. நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ராபின் வுட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு இவர் சிறப்பு நடனமாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகி 24 மணி நேரங்களுக்குள்ளாகவே நடிகை கெத்திகா ஷர்மா அதிக பிரபலமடைந்துள்ளார்.

அவரது நடனத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே தெலுங்கு சினிமாவில் அடுத்த பிரபலமான நடிகையாக இவர் மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top