Actress
அந்த கண்ணு இருக்கே… அசத்தும் க்ரித்தி ஷெட்டி!..
தற்சமயம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக க்ரீத்தி ஷெட்டி உள்ளார். குறைந்த அளவில்தான் படங்கள் நடித்துள்ளார் என்றாலும் கூட அதிகமான ரசிக வட்டாரத்தை கொண்டுள்ளார் க்ரீத்தி ஷெட்டி.

இவர் முதன் முதலாக மலையாள சினிமாவில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் நடித்த உப்பனா என்கிற திரைப்படம் ஆவரேஜான வெற்றியைதான் பெற்றது என்றாலும் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

ஏனெனில் அந்த படத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 17 வயதிலேயே அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார் க்ரீத்தி ஷெட்டி.

தமிழ் மக்களிடையே அவரை அறிமுகப்படுத்திய திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். தெலுங்கில் வந்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படமானது தமிழில் டப்பிங் செய்து வெளியானது. இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டிக்கு கவர்ச்சியான காட்சி ஒன்றும் இருந்தது.

இந்த படத்திலேயே இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து அவர் நடித்த வாரியர் திரைப்படம் தென்னிந்திய அளவில் பிரபலமானது. அதில் வரும் புல்லட் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தமிழில் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் க்ரீத்தி ஷெட்டி, ஆனால் பிறகு அவர் படத்தை விட்டு விலகிவிட்டார்.
