News
கணவர் நடிகையுடன் செய்த லீலைகள்தான் விவகாரத்துக்கு காரணமா!.. மனம் திறந்த அஜித் பட நடிகை!.
Actress Manju Warrier : மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பல நடிகைகள் பிரபலமாகியுள்ளனர். ஏனெனில் மலையாள சினிமாவை விடவும் தமிழ் தெலுங்கு சினிமாவில் சம்பளம் அதிகம். இதனாலேயே மலையாள நடிகர்கள் கூட அவ்வப்போது தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடிப்பதுண்டு.
அந்த வகையில் நடிகை மஞ்சு வாரியர் தொடர்ந்து தமிழ் சினிமா மீது கவனம் செலுத்து வருகிறார். தனுஷிற்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே போல துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர்.
அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளன. மஞ்சு வாரியர் தனது முன்னாள் கணவர் திலீப்பை விவகாரத்து செய்தது சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் பெரும் அலையை ஏற்படுத்தியது.

எதனால் இவருக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்து மஞ்சு வாரியர் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மஞ்சு வாரியரிடம் பேசும்போது திலீப்பை விவகாரத்து செய்வதற்கு என்ன காரணம் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியர் கூறும்போது, அந்த காரணத்தை இப்போது நான் கூறுவதால் எனக்கு எந்த நன்மையும் நடக்க போவதில்லை. மேலும் அது எனக்கு மனவேதனையைதான் ஏற்படுத்தும். எனவேதான் இதுக்குறித்து நான் எங்கும் பேசுவதில்லை என கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.

மேலும் அந்த விஷயம் தனது குடும்பத்தாரையும் பாதிக்கும். அவர்களுக்கும் வேதனையளிக்கும் என கூறியுள்ளார் மஞ்சு வாரியர். இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆன சமயத்தில் ஒரு கிசுகிசு வலம் வந்துக்கொண்டிருந்தது.
அதாவது மஞ்சு வாரியரின் கணவர் திலீப்பிற்கும் நடிகை பாவனாவிற்கும் இடையே தொடர்பு இருந்ததாக ஒரு பேச்சு இருந்தது. ஒருவேளை மஞ்சு வாரியர் அந்த விவகாரத்தைதான் இப்படி மறைமுகமாக கூறுகிறாரோ என கேள்வி எழுகிறது.
