விபச்சார வழக்கால் சுவடு தெரியாமல் போன ரஜினி பட நடிகை!.. அடக்கொடுமையே!..
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போன பிரபலங்கள் பலர் உண்டு. அப்படியான ஒருவர்தான் நடிகை மாதுரி. நடிகை மாதுரியை பொறுத்தவரை அவர் மதுரையில் பிறந்த தமிழ் பெண் ஆவார்.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே இவர் பாவம் கொடூரன் என்கிற மலையாள திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போதைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பருவத்தில்தான் பெண்கள் கதாநாயகி ஆகி வந்தார்கள்.

ஆனால் மாதுரி அந்த படத்திலேயே அதிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தின் கதையே கொஞ்சம் கோக்குமாக்கான கதையாகும். பள்ளி மாணவிக்கும் 40 வயது நபருக்கும் இடையே ஏற்படும் தகாத உறவை கதை களமாக வைத்து அந்த கதை செல்லும்.
மார்க்கெட்டை இழந்த நடிகை:
இந்த படத்தில் மாதுரியின் கவர்ச்சிக்காகவே தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு விஜயகாந்த் நடித்த அலை ஓசை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் பாலைவன ரோஜாக்கள், மனிதன் என பல தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் மாதுரி. ஆனால் சில காலங்களுக்கு பிறகு அவர் திடீரென தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அவரே சினிமாவில் இருந்து விலகிவிட்டார் என்று ஒரு பக்கம் பேச்சு இருந்தது.
அதே சமயம் திரைத்துறையினர் அவரை விலக்கிவிட்டதாகவும் ஒரு பக்கம் பேச்சு இருந்து வந்தது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு ஒரு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் மாதுரி. அதற்கு பிறகு அவர் என்னவானார் என தெரியவில்லை.
ஆனாலும் வேறு எந்த பிரபலமான நடிகைகளும் இப்படி சினிமாவில் காணாமல் போனது கிடையாது.