நீச்சல் உடையில் நடிக்க நினைச்சதால் வந்த விபரீதம்.. அப்படி பார்ப்பாங்க..! உண்மையை கூறிய நடிகை மீனா..!
நடிகை மீனாவை பொருத்தவரை தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தை மட்டும் ஒருபோதும் பெற்று விடக்கூடாது என்று நினைத்து வந்த நடிகை ஆவார்.
ஏனெனில் பெரும்பாலும் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று பெயர் வாங்கும் நடிகைகளால் வெகு நாட்கள் சினிமாவில் இருக்க முடியாது. மேலும் மீனாவின் தாயார் மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர்தான்.
அதனால் அவருக்கு கடைசி வரை மரியாதை என்பதே சினிமாவில் கிடைக்கவில்லை. எனவே அப்படி ஒரு நடிகையாக மீனா இருக்கவே கூடாது என்று நினைத்து வந்தார். இதனால் அவர் நடித்த காலகட்டங்களில் தொடர்ந்து அதிக கவர்ச்சி இல்லாமல் மீனா நடித்து வந்தார்.

அனுபவத்தை பகிர்ந்த மீனா:
இந்த நிலையில்தான் ரசிகர்கள் தொடர்ந்து மீனாவை கவர்ச்சியாக நடிக்கும்படி கேட்டு வந்தனர். அவர்களுக்காக அதை நிறைவேற்றுவதற்காக ஒரு திரைப்படத்தில் மட்டும் கவர்ச்சியாக நடிப்போம் என்று பிரபு தேவா திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடித்திருந்தார் மீனா.
அந்த படத்தில் நடித்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது அந்த ஒரு காட்சிகள் நடிப்பதற்கு எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. வெளியில் வரவே எனக்கு கூச்சமாக இருந்தது.
அப்போதுதான் நான் இந்த கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் குறித்து யோசித்தேன் அவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த காட்சிகளை எல்லாம் நடிக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்போதுமே தலை வணங்குகிறேன் என்று கூறியிருந்தால் மீனா.