Tamil Cinema News
அப்பாவுக்கு பிறகு எல்லாமே இழந்து நின்னேன்.. லக்கி பாஸ்கர் நடிகையின் துயர பக்கங்கள்..!
தமிழில் ஒரு சில திரைப்படங்களில்தான் நடித்தார் என்றாலும் கூட இப்பொழுது தென்னிந்தியா முழுவதும் ட்ரெண்டான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி.
மீனாட்சி சௌத்ரி சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கூட அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் இளம் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
இந்த திரைப்படத்தில் உச்சபட்ச கவர்ச்சியில் நடித்திருந்தார் மீனாட்சி சௌத்ரி. அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு மனைவி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் முழுக்கவும் அவருக்கு கவர்ச்சி என்பதே கிடையாது. ஒரு டூயட் பாடல் கூட கிடையாது. ஆனாலும் கூட கோட் திரைப்படத்தை விடவும் மீனாட்சி சௌத்ரிக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது லக்கி பாஸ்கர் திரைப்படம் .
இந்த படம் மூலமாக இப்பொழுது முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் மீனாட்சி சௌத்ரி. இந்த நிலையில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து அவர் கூறி இருக்கிறார். எனது தந்தை இறந்த பொழுது என்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்தேன்.
இதற்கு மேல் வாழ்க்கையில் கஷ்டம் அனுபவிக்க எதுவுமே இல்லை என்பதுதான் எனது மனநிலையாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு எனது வாழ்க்கையில் நன்மைகள் நடந்தன. எனது தந்தை இறந்த 2018 ஆம் ஆண்டே நான் மிஸ் இந்தியா விருதை வென்றேன்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் மட்டுமே அனுபவித்த எனக்கு அப்பொழுது நடந்த அந்த விஷயம் மிகப்பெரும் நல்ல விஷயமாக தோன்றியது. அதற்கு பிறகுதான் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. அதற்கு பிறகு எனக்கு தொடர்ந்து கடவுளின் ஆசியும் எனது தந்தையின் ஆசியும் கிடைத்து வருகிறது என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் மீனாட்சி சௌத்ரி.
