Tamil Cinema News
அஜித் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்..! மதிக்காமல் சென்ற நயன்தாரா.. இதுதான் காரணமா?
சமீபத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் வெகுவாக காத்திருந்த திரைப்படமாக அது இருந்தது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் வெகு காலமாக காத்திருந்த படமாக விடாமுயற்சி இருந்தது.
தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை வைத்து மகிழ் திருமேனி திரைப்படம் இயக்குவதற்கு முன்பு விக்னேஷ் சிவன் தான் அவரை வைத்து திரைப்படம் இயக்குவதாக இருந்தது.
ஆனால் அஜித்துக்கு அந்த கதை பிடிக்கவில்லை. இதனால் அவர் மகிழ் திருமேனியை தேர்ந்தெடுத்தார். மகிழ் திருமேனிக்கு குறைந்த காலத்தில் ஒரு கதையை எழுத வேண்டிய சூழ்நிலை இருந்தது. எனவேதான் ஹாலிவுட் திரைப்படமான ப்ரேக் டவுன் திரைப்படத்தை தமிழில் விடாமுயற்சி படமாக்கினார்.
இந்த நிலையில் படம் வெளியான பிறகு இந்த படம் ஹாலிவுட் பாணியில் இருப்பதாக விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். எனவே இதன் மூலம் தனக்கு அஜித் மகிழ் திருமேனி திரைப்படத்தில் நடித்ததில் எந்த வருத்தமும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார் விக்னேஷ் சிவன்.
ஆனால் நயன் தாராவிடம் விடாமுயற்சி படம் குறித்து கேட்டப்போது அவர் அதுக்குறித்து எந்த ஒரு பதிலுமே கூறாமல் சென்றுவிட்டார். இதுக்குறித்து சினிமா வட்டாரத்தில் கூறும்போது விக்னேஷ் சிவன் படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என நயன் தாரா வேண்டி கேட்டுக்கொண்டார்.
ஆனால் இறுதிவரை அதற்கு அஜித் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த கோபத்தில்தான் நயன் தாரா விடாமுயற்சி குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்கின்றனர்.
