Connect with us

ஒரே ஒரு தவறான முடிவு… வீட்டை விற்கும் நிலைக்கு வந்த ரம்பா.. ஜோதிகாவும் இதற்கு காரணமா?..பின்னணி என்ன?

Cinema History

ஒரே ஒரு தவறான முடிவு… வீட்டை விற்கும் நிலைக்கு வந்த ரம்பா.. ஜோதிகாவும் இதற்கு காரணமா?..பின்னணி என்ன?

ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்பா. பாலிவுட்டில் பெரிய கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் ரம்பாவின் ஆசையாக இருந்தது.

ஆனால் பாலிவுட்டில் அப்பொழுது போட்டிகள் அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து கன்னடம், போஜ்புரி என்று பல மொழிகளில் நடித்து வந்தார் ரம்பா. இந்த நிலையில்தான் தமிழில் உழவன் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

1993 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான உழவன் திரைப்படம் பெரும் நஷ்டத்தை கண்டது. அதனை தொடர்ந்து ராசி இல்லாத நடிகை என்று கூறி ரம்பாவிற்கு வாய்ப்பு தருவதை நிறுத்தி வைத்தனர்.

தமிழில் அறிமுகம்:

இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சியிடம் வாய்ப்பை பெற்று 1996 இல் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் நடித்தார் ரம்பா. அந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து ரம்பா தமிழ் சினிமாவில் வெற்றி நடிகையாக மாறினார்.

அதனை தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா என்று நிறைய திரைப்படங்களில் ரம்பா நடித்திருந்தார் ரஜினியுடன் சேர்ந்து அருணாச்சலம் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். பெரும் பிரபலங்களுடன் தொடர்ந்து நடித்து வந்த போதும் கூட ரம்பாவிற்கு இடையில் வந்த ஒரு விபரீத ஆசை அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

திரைப்படம் தயாரித்து வழங்கலாம் என்பது ரம்பாவின் அப்பொழுதைய ஆசையாக இருந்தது. எனவே வைத்திருந்த பணத்தை வைத்து த்ரீ ரோசஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை தயாரிப்பு செலவுகள் அதிகமானது.

ரம்பாவிற்கு வந்த கடன்:

ஏனெனில் திரைப்படத்தில் ஜோதிகா மாதிரியான முன்னணி நடிகைகளையும் இவர் நடிக்க வைத்தார். அதனை தொடர்ந்து சம்பளத்திற்காக கடன் வாங்கி படத்தை தயாரித்தார். அதிக கவர்ச்சியுடன் எடுக்கப்பட்டாலும் கூட அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.

அதனை தொடர்ந்து பெரும் கடன் சுமையில் மாட்டிக் கொண்டார் ரம்பா. இந்த கடன் சுமையை குறைப்பதற்காக பட வாய்ப்புகளை தேடி சென்ற பொழுது பட வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன. மேலும் நடிகைகளுக்கான சம்பளமும் அப்போது மிகவும் குறைவுதான்.

எனவே மவுண்ட் ரோட்டில் இருக்கும் தனது வீட்டை விற்று பாதி கடனை அடைந்தார். அதற்கு மேலும் கடன் இருந்த காரணத்தினால் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து மீதி கடனை அடைத்தார் ரம்பா.

தற்சமயம் அந்த தொழிலதிபருடன் கனடாவில் வசித்து வரும் ரம்பா திரும்ப சினிமாவில் நடிக்கவே இல்லை அவர் தயாரித்த ஒரு திரைப்படமே அவரது சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

vijay sethupathi jeffery
raveendar 2
jeffery
soundarya
To Top