Tamil Cinema News
விஜய்யை விட 4 மடங்கு அதிக சொத்து.. ரம்பாவின் சொத்து மதிப்பின் பின்னணி..!
தமிழ் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் கதாநாயகிகளாக இருக்கும் நடிகைகளில் நடிகை ரம்பா மிக முக்கியமானவர். நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே அவருக்கு என்று இருக்கும் வரவேற்பு குறையாமலே தான் இருந்து வந்தது.
பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போன பிறகுதான் சினிமாவை விட்டு விலகுவார்கள். ஆனால் ரம்பாவை பொறுத்தவரை திருமணம் ஆன காரணத்தினால் தான் அவர் சினிமாவை விட்டு விலகினார்.
மற்றபடி சினிமாவை விட்டு விலகும் பொழுதும் ரம்பாவுக்கான மார்க்கெட் என்பது இருந்து கொண்டு தான் இருந்தது. தற்சமயம் ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி என்று தயாரிப்பாளர் கலைபுலி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. தமிழில் இருக்கும் விஜய் அஜித் மாதிரியான முன்னணி நடிகர்களின் சொத்து மதிப்பை விடவும் இது அதிகம் என்று கூறப்படுகிறது.
ரம்பாவிற்கு இவ்வளவு சொத்து மதிப்பு எப்படி வந்தது என்பது பலருக்கு கேள்வியாக இருக்கிறது. ரம்பாவின் கணவரான இந்திரகுமார் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார்.
அவர் ஏற்கனவே நிறைய நிறுவனங்கள் நடத்தி வருகிறார் ரம்பாவுடன் திருமணமான பிறகு ரம்பாவின் பெயரிலும் அவர் நிறுவனங்கள் நிறைய தொடங்கினார். இதன் மூலமாக வந்த வருவாய்தான் இந்த தொகை என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை ரம்பா மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.
