Cinema History
குடும்பத்துக்கே ஷாக் கொடுத்த பாலச்சந்தர்.. முதல் படத்தில் யாருக்குமே கிடைக்காத சர்ப்ரைஸ்.. ரேவதிக்கு நடந்த நிகழ்வு..!
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேவதி.
பள்ளி பருவத்திலேயே நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிட்டார். நடிகை ரேவதி கதாநாயகியாக நடித்து வந்த காலகட்டத்தில் அவருக்கென்று மிகப் பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்து வந்தது.
இப்பொழுதும் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரேவதி. இந்த நிலையில் மண்வாசனை திரைப்படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் கூறும் பொழுது பாரதிராஜா சார் ஒரு பள்ளியின் வாசலில் தான் என்னை பார்த்தார். எங்கள் வீட்டில் பேசி எனக்கு அந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அந்த படத்தில் நடித்த போது கூட எனக்கு பெரிதாக உற்சாகமில்லை.
ஆனால் படம் முடிந்த பிறகு ஜெமினி பாலத்திற்கு நான் நடித்த படத்தின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்தது. உடனே சென்று அதை பார்ப்போம் என்று எனது குடும்பத்துடன் கிளம்பி அங்கே சென்றேன்.
அந்த ஆச்சரியத்தை இப்பொழுதும் என்னால் மறக்க முடியாது 100 அடி அளவுக்கு மிகப்பெரிய கட்டவுட் ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்தது அப்போதுதான் சினிமா எப்படிப்பட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ரேவதி.
