Connect with us

உறவுக்கு அழைத்த 60 வயது கிழவன்.. 17 வயதிலேயே நடந்த துன்பம்.. உண்மையை பகிர்ந்த நடிகை

Actress Reehana

News

உறவுக்கு அழைத்த 60 வயது கிழவன்.. 17 வயதிலேயே நடந்த துன்பம்.. உண்மையை பகிர்ந்த நடிகை

Social Media Bar

Rihanna: தற்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் கதாநாயகி, கதாநாயகனை பிடித்த காலங்கள் போய்,தற்பொழுது வில்லி கேரக்டரிலும், வில்லன் கேரக்டரிலும் நடிக்கும் நடிகர், நடிகைகளை மக்கள் பெரிதும் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் அனைவருக்கும் பிடித்த சீரியல் ஆக அமைந்தது. இந்த சீரியலில் மாரி கேரக்டரில் நடித்து வந்தவர் தான் ரிஹானா. அந்த அந்த சீரியலில் இருந்து விலகி விட்டு, தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற பெயரில் நடித்த வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் கடந்து வந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதை கேட்ட அவரின் ரசிகர்கள் ரிஹானா இவ்வளவு துயரங்களை கடந்து வந்து உள்ளாரா என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

ரிஹானாவின் கடந்த கால வாழ்க்கை

ரிஹானா முன்னதாக ஒரு நபருடன் திருமணம் ஆகி அது விவாகரத்தில் முடிந்தது. மேலும் அவர் கூறும் பொழுது நான் நன்றாக படிப்பேன். என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் என் படிப்பை தொடர முடியவில்லை எனவும் கூறினார். மேலும் அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருப்பதாக அவர் தெரிவித்தார். ரிஹானா சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Actress Reehana

இந்நிலையில் நான் திருமணத்திற்கு முன்பாக பல கஷ்டங்களை அனுபவித்து இந்நிலைக்கு வந்திருக்கிறேன் என அவர் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும் பொழுது நான் ஹோம் நர்சாக இருந்தபோது ஒரு வீட்டிற்கு சென்றேன். அந்த வீட்டில் 60 வயது முதியவர் இருந்தார். அவர் என்னிடம் நீ ஏன் இந்த வேலைக்கு வந்திருக்கிறாய் என கேட்டார். நான் என்னுடைய திருமணத்திற்காக நகை வாங்க வேண்டும் என இந்த வேலைக்கு வந்து இருப்பதாக தெரிவித்தேன். அதற்கு அந்த முதியவர் நீ ஒன்றும் கவலைப்படாதே, என்னை அனுசரித்து நடந்தால் உன் திருமணத்திற்கு வேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன் என அவர் கூறினார். இது எனக்கு மிகவும் பயத்தையும் மனக்கஷ்டத்தையும் உண்டு செய்தது.

உடனே நான் அவரிடமிருந்து விலகி ஒரு அறையில் சென்று நடந்தவற்றை என்னுடைய அலுவலகத்திற்கு தெரிவித்தேன். உடனே அவர்கள் அங்கு வேலை செய்ய வேண்டாம் எனக் கூறி, வேறு ஒரு இடத்திற்கு என்னை அனுப்பினார்கள். இவ்வாறு சிலர் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் அவ்வாறு கிடையாது பல வயதானவர்கள் என்னை ஆசிர்வதித்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிர்வத்தால் மட்டும் தான் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என தெரிவித்தார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயார்

எனக்கு திருமணம் ஆகி அண்மையில் தான் விவாகரத்து நடந்தது. மேலும் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கென ஒரு வாழ்க்கையை நான் அமைத்துக் கொள்வேன். இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களை இந்த சமூகம் தவறாகத்தான் பார்க்கும். ஆனால் ஒரு கணவன் இல்லாமல் வாழும் பெண்ணுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top