Connect with us

நாக்கால் நக்கிய நடிகர்.. ரொம்ப அருவருப்பா இருந்துச்சு!.. நடிகை சதா ஆவேசம்!..

News

நாக்கால் நக்கிய நடிகர்.. ரொம்ப அருவருப்பா இருந்துச்சு!.. நடிகை சதா ஆவேசம்!..

Social Media Bar

ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதற்கு பிறகு சதாவிற்கு அந்நியன் திரைப்படம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

முதல் படம் முழுக்க பாவாடை தாவணி கட்டி நடித்து வந்த சதா அதற்கு பிறகு நடித்தப்போது உச்சப்பட்ச கவர்ச்சியில் நடித்திருந்தார்.அந்நியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில் எல்லாம் யாருமே எதிர்பார்க்காத கவர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் சதா.

மார்க்கெட் இழந்த சதா:

இந்த நிலையில் கொஞ்ச நாட்களிலேயே சதாவிற்கு மார்க்கெட் குறைய துவங்கியது. அதற்கு பிறகு வாய்ப்புகள் எதுவும் வராததால் வடிவேலுவிற்கு ஜோடியாக எலி திரைப்படத்தில் நடித்தார் நடிகை சதா.

actress sadha

அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கியது. இந்த நிலையில் சதா தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார். இதற்கு நடுவே ஒரு பேட்டியில் பேசும்போது ஜெயம் படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை கூறியிருந்தார்.

அதாவது ஜெயம் படத்தில் நடிக்கும்போது அதில் ஒரு காட்சியில் வில்லன் கதாபாத்திரம் தனது நாக்கால் சதாவின் கன்னத்தில் நக்குவது போன்ற காட்சி இருக்கும். அந்த காட்சி படமாக்கும்போது அப்படி ஒரு காட்சி இருப்பதையே கூறவில்லை.

அன்று அந்த காட்சியில் நடித்தப்போது அருவருப்பாக இருந்தது. பிறகு வீட்டிற்கு வந்து அழுதேன். அது என் திரைப்பட வாழ்க்கையிலேயே மோசமான அனுபவம் என கூறியுள்ளார் சதா.

To Top