Connect with us

டான்ஸ் ஆட கூப்பிட்டு மோசம் பண்ணிட்டாங்க!.. அழுதுக்கிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.. தெலுங்கு படத்தில் சாய் பல்லவிக்கு நடந்த கொடுமை!.

sai pallavi

Cinema History

டான்ஸ் ஆட கூப்பிட்டு மோசம் பண்ணிட்டாங்க!.. அழுதுக்கிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.. தெலுங்கு படத்தில் சாய் பல்லவிக்கு நடந்த கொடுமை!.

Social Media Bar

Sai Pallavi on Telugu movie: பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் வெகுவாக பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு தென்னிந்தியா முழுக்க சாய் பல்லவிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழிலும் கூட ஒரு சில படங்களில் நடித்தார் சாய் பல்லவி. ஆனால் தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி சிறப்பாக நடனமாட கூடியவர். மாரி 2 திரைப்படத்தில் கூட அவர் ஆடிய ரவுடி பேபி பாடல் எந்த அளவிற்கு பிரபலமானது என பலருக்கும் தெரிந்திருக்கும்.

அதே சமயம் கவர்ச்சி காட்டி நடிப்பதில் சாய் பல்லவிக்கு அவ்வளவாக விருப்பம் கிடையாது. அவரது திரைப்படங்களில் அவர் கவர்ச்சியாக நடிப்பதை பார்ப்பது அரிதான விஷயமாகும். ஆனால் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

சாய் பல்லவி கவர்ச்சி காட்ட மாட்டார் என்பதால் அவரிடம் அதிகமாக நடனத்தை வாங்கி அதை வைத்து சமரசம் செய்துக்கொண்டனர் தெலுங்கு சினிமா துறையினர். இந்த நிலையில் மிடில் க்ளாஸ் ஆம்பள என்கிற திரைப்படத்தில் முதுகை வளைத்து ஒரு நடனத்தை சாய் பல்லவிக்கு வைத்துள்ளனர்.

அந்த நடனம் கொஞ்சம் கடினமான நடனமாகும். பாடலுக்காக அதை ஆடும்போது 20 முறைக்கும் மேல் அதை செய்ததால் சாய் பல்லவிக்கு பயங்கரமான முதுகு வலி வந்ததது. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டுமா? என அழுதுக்கொண்டேதான் அன்று வீட்டிற்கு வந்தேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சாய் பல்லவி.

To Top