இதுதான் என்னுடைய முதல் காதல்.. வெளிப்படையாக கூறிய நடிகை சமந்தா..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் சமந்தா முக்கியமானவராக இருக்கிறார். ஆரம்பத்தில் சமந்தாவிற்கு தமிழில் பெரிதாக வரவேற்புகள் என்பதே இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சமந்தா. அந்த திரைப்படத்திற்கு பிறகு சமந்தாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின.

அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளையும் பெற துவங்கினார் சமந்தா. இந்த நிலையில்தான் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே உறவு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

Social Media Bar

அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டனர்.இந்த நிலையில் மையோ சிட்டிஸ் என்கிற நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமந்தா சில நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இப்பொழுது மீண்டும் திரையில் அவர் நடிக்க துவங்கியிருக்கிறார்.

வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் வரவேற்பை பெற துவங்கி இருக்கிறார் சமந்தா இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தற்சமயம் இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் சில மாதங்களில் அவற்றின் வேலைகள் முடிந்துவிடும்.

அவற்றை தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க இருக்கிறேன். தொடர்ந்து எனக்கு வேலைகள் இருக்கிறது எப்பொழுதுமே என்னுடைய முதல் காதல் என்பது சினிமா தான் என்று கூறியிருக்கிறார் சமந்தா.