News
அப்பா வயது நடிகருடன் அந்த காட்சியில் சாரா.. எதுக்குமா இந்த வேலை.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.!
தமிழில் தெய்வத்திருமகள் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை சாரா. அந்த திரைப்படத்தில் ஆறு வயது குழந்தையாக இருக்கும் சாரா அதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்த நிலையில் அதற்குப் பிறகு சைவம் என்கிற ஒரு திரைப்படத்தில் பேபி சாரா நடித்தார். அதில் நடித்த பிறகு அவரை எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை.
பிறகு வெகு காலங்களுக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாரா. அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக அவர் செய்திருந்ததார். அவருக்கு அதில் வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது.
சாராவின் அடுத்த படம்:
தொடர்ந்து அவர் எப்படியும் கதாநாயகியாக நடிக்க துவங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அதனைப் போலவே இப்பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் நடிகை சாரா.
இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த படத்தில் இவருக்கு கதாநாயகனாக நடிக்கப் போகிறவர் நடிகர் ரன்வீர் சிங். இந்த திரைப்படம் ஒரு பாலிவுட் திரைப்படம் என்று கூறப்படுகிறது. நடிகர் ரன்வீர் சிங்குக்கு 40 வயதாகிறது.
ஆனால் சாராவிற்கு 19 வயது தான் ஆகிறது இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது ஏனெனில் கண்டிப்பாக பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகள் என்பது இருக்கும். எனவே கண்டிப்பாக சாராவிற்கும் ரன்வீர் சிங்கிற்கும் இடையே நெருக்கமான காட்சிகள் படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
