Cinema History
அந்த சீன்ல புடிக்காமதான் நடிச்சேன்.. ஆனா நிறைய விருது கிடைச்சது!.. நடிகை சரண்யா வேண்டா வெறுப்பாக நடித்த காட்சி!.
தமிழ் சினிமாவில் அம்மாவாக நடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சரண்யா. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடன் அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா. அதையும் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய கூடியவர் சரண்யா.
அம்மாக்களிலேயே நகைச்சுவை கதாபாத்திரம், சீரியஸான கதாபாத்திரம் என இரண்டிலுமே இவர் சிறப்பாக நடிப்பார். உதாரணமாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முற்றிலும் சீரியஸான கதாபாத்திரமாக இருப்பார். ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அவ்வளவிற்கு மாற்றமாக நடித்திருப்பார் சரண்யா.
இவர் ஒரு பேட்டியில் எம் மகன் திரைப்படத்தில் நடித்த அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது எம் மகன் படத்தில் குழாயடியில் உருளும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. பொதுவாகவே இந்த மண் தண்ணீர் போன்றவை எனது உடலில் படுவது எனக்கு பிடிக்காது. எனவே நான் அதில் நடிக்க மாட்டேன் என கூறினேன்.
உடனே அந்த காட்சியில் நடிப்பதற்கு வடிவேலு தயாராக இருந்தார். ஆனால் அந்த காட்சி சரண்யா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என நினைத்தார் இயக்குனர். எனவே சரண்யாவை அழைத்த திருமுருகன், இந்த காட்சியை வடிவேலு நிமிடத்தில் நடித்துவிடுவார். ஆனால் நீங்கள் நடித்தால்தான் இது நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
சரி என வேண்டா வெறுப்பாக அந்த காட்சியில் நடித்துள்ளார் சரண்யா. ஆனால் அந்த படம்தான் அவருக்கு மாநில விருதை பெற்று தந்தது. இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
