Connect with us

இதான் சான்ஸ்ன்னு அடி பின்னிட்டாங்க… அம்மா நடிகையிடம் துடைப்ப கட்டையில் அடி வாங்கிய தனுஷ்!..

dhanush saranya

Cinema History

இதான் சான்ஸ்ன்னு அடி பின்னிட்டாங்க… அம்மா நடிகையிடம் துடைப்ப கட்டையில் அடி வாங்கிய தனுஷ்!..

Social Media Bar

Dhanush : தமிழில் படத்தின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகர்களில் நடிகர் தனுஷும் முக்கியமானவர். அதிகபட்சம் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் இளைஞர்களை குறி வைத்து இருக்கும்.

அதிகப்பட்சம் அவர் தற்போதைய தலைமுறைக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் .அதே சமயம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அது சிறப்பான கதாபாத்திரமாக இருந்தால் அதை நடிக்க தயாராக இருக்கிறார் தனுஷ்.

dhanush
dhanush

வெற்றிமாறன் கூட ஒரு பேட்டியில் கூறும்போது அசுரன் திரைப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிய பிறகு பல நடிகர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தனுஷ் அந்தக் கதையைக் கேட்ட உடனேயே அதற்கு ஒப்புக்கொண்டார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனுஷிற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான சில திரைப்படங்களில் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும். அது குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

தனுஷிற்கு விழுந்த அடி:

அதில் அவர் கூறும் பொழுது நடிகை சரண்யாதான் அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு அம்மாவாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் சரண்யா என கூறலாம். ஏனெனில் அவரது இறப்பிற்கு பிறகுதான் படத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த நிலையில் ஒரு காட்சியில் துடைப்பத்தை வைத்து தனுஷை அடிப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது.

அப்பொழுது சரண்யா எப்படி சார் இதை வைத்து நான் உங்களை அடிப்பது என்று தயங்கி இருக்கிறார். அதற்கு தனுஷ் நடிப்புக்காக தானே நிஜமாகவா அடிக்கப் போகிறீர்கள் என்று கூறி அந்த காட்சியில் அடிக்க வைத்திருக்கிறார். ஆனால் அந்த காட்சி எடுக்கப்பட துவங்கிய உடனே நிஜமாகவே துடைப்பத்தை வைத்து அடித்து இருக்கிறார் சரண்யா.

இதனால் பலமாக அடி விழுந்தது என்று அந்த பேட்டியில் கூறுகிறார் தனுஷ். என்ன மேடம் அடிப்பதற்கே முதலில் தயங்கினீர்கள் இப்பொழுது என்னவென்றால் இப்படி சுளீரென்று அடிக்கிறீர்களே என்று தனுஷ் கேட்ட பொழுது இல்லை தம்பி ஒரே டேக்கில் இந்த காட்சி ஓ.கே ஆக வேண்டும்.

இல்லை என்றால் திரும்பத் திரும்ப உங்களை நான் அடிக்க வேண்டி இருக்கும் இல்லையா? அதனால் தான் காட்சியை சரியாக செய்ய வேண்டும் என்று அப்படி செய்து விட்டேன் என்று எதார்த்தமாக கூறி இருக்கிறார்கள் சரண்யா.

To Top