News
70 வயது நடிகரும்.. 56 வயது சீதாவும்.. படுக்கையறை ரொமான்ஸ்.. வைரல் வீடியோ!.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர்கள் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கமே திரும்பாத நிலையில் தற்போது சில நடிகைகள் சினிமாவிற்குள் ரி-என்டரி கொடுத்திருக்கிறார்கள்.
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, பாரிஜாதம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மருதுபாண்டி, புதிய பாதை போன்ற தமிழ் படங்களில் நடித்து அசத்திய நடிகை சீதா.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்நிலையில் இவர் தற்போது ஒரு சீரியலில் நடித்து அதில் அவர் பிரபல நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பது தற்போது அனைவரின் மத்தியிலும் வைரலாக்கப்பட்டு வருகிறது.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சீதா
தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கும் சீதா பார்த்திபன் இயக்கிய புதிய பாதை படத்தில் நடித்தார். அப்போது அவரின் மீது காதல் ஏற்பட வீட்டின் சம்மதம் இல்லாமல் நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய அதன் பிறகு, சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த வாழ்க்கையும் சரி இல்லாததால் இப்பொழுது தனியாக வசித்து வருகிறார் சீதா.
70 வயது முன்னணி நடிகருடன் ரொமான்ஸ் செய்த சீதா
தற்போது சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் சீதா வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் டிஸ்னி ஹாஸ்டாரில் “மை பர்பெக்ட் ஹஸ்பெண்ட்” என்ற தொடரில் நடித்து வருகிறார் சீதா. இந்த படமானது வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டிஸ்னி ஹாஸ்டாரில் வெளிவர இருக்கும் நிலையில் சீதாவின் கணவராக சத்யராஜ் நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் 70 வயது நடிகர் சத்யராஜுடன் 56 வயது நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்ற செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து வந்த விளம்பரத்தில் சத்யராஜ் மார்பில் சாய்ந்த படி சீதா காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் அந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.
இது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசு பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் சீதாவின் நடிப்பையும் பலரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
