பிரபல நடிகர்களுக்கு இந்த வேலை செஞ்சா தனி பேமண்ட்… ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சினேகா. ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சினேகா அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

அந்த ஆனந்தம் திரைப்படம் வெளியான சமயத்தில் அவருக்கு நிறைய வரவேற்புகள் இருந்தது. இதனால் எக்கச்சக்கமான திரைப்படங்களில் அப்பொழுது வாய்ப்புகளை பெற்று நடித்தார்.

அப்படியாக அவர் நடித்த புன்னகை தேசம், உன்னை நினைத்து மாதிரியான காதல் தொடர்பான திரைப்படங்கள் பலவும் பெரிய வெற்றியை கொடுத்தது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த வசீகரா திரைப்படம் இப்பொழுதும் வரவேற்பை பெற்ற ஒரு படமாக தான் இருந்து வருகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அது தொடர்பாக நடிகர் பிரசாந்துடன் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டார் சினேகா. அதில் அவர் கூறும் பொழுது சாப்பிடும் விஷயத்தை பொருத்தவரை அதில் பிரசாந்த் தனித்துவமானவர்.

sneaha
sneaha
Social Media Bar

அவர் எப்போதுமே படக்குழுவில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார். அது எந்த அளவிற்கு என்றால் அவர் சாப்பிடும் இடத்தில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் இருக்க வேண்டும்.

ஒரு வேளை யாராவது இல்லை என்றால் அவர்களை தேடி பிடித்து அழைத்து அமர வைத்து தான் அவர் சாப்பாடு சாப்பிடுவார். அதே போல படத்தில் பணியாற்றக்கூடிய நபர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ளக் கூடியவர் பிரசாந்த்.

அந்த அளவிற்கு பட குழுவின் மீது அக்கறை கொண்டவர் என்று கூறிய சினேகா பிறகு என்ன பிரசாந்த் நீங்கள் கூறியபடி கூறிவிட்டேன் பேமெண்ட் சரியாக கொடுத்து விடுவீர்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பிரசாந்த் எப்ப யாருப்பா அங்க மேடம்க்கு கேட்ட பேமெண்ட் கொடுத்துடுங்க என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படி கூறினால் எனக்கு தனியாக பேமெண்ட் தருவதாக பிரசாந்த் கூறினார் அதனால்தான் அப்படி கூறினேன் என்று காமெடியாக கூறியிருக்கிறார் சினேகா.