படப்பிடிப்பில் எல்லை மீறிய நடிகர்.. தனுஷ் படத்தில் கதறி அழுத நடிகை சினேகா.!
சினேகா தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார். பெரும்பாலும் கவர்ச்சி உடை எதுவும் இல்லாமல் டீசண்டாக திரை முன் தோன்றும் நடிகையாக நடிகை சினேகா இருந்து வருகிறார்.
அப்படி இருந்து சினேகா குறித்து அதிகமான விமர்சனத்தை ஏற்படுத்தியன் திரைப்படம் ஒன்றும் உண்டு. அது வேறு எந்த படமும் இல்லை. புதுப்பேட்டை திரைப்படம்தான். புதுப்பேட்டை திரைப்படத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சினேகா பகிர்ந்துள்ளார். நடிகர் பாலா சிங் என்னும் நடிகர் ஒரு காட்சியில் சினேகாவை அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நடிகர் பாலா சிங் நிஜமாகவே சினேகாவின் வயிற்றில் அடித்தார்.

அந்த காட்சி எடுக்கப்பட்ட பிறகு கேரவனுக்கு சென்ற சினேகா அங்கு கதறி அழுதுள்ளார். இந்த நிலையில் இதனை கண்ட உதவி இயக்குனர் ஒருவர் இயக்குனர் செல்வராகவனிடம் இதை கூறியுள்ளார்.
பிறகு படக்குழு சினேகாவை வந்து இதுக்குறித்து விசாரித்துள்ளனர்.