Connect with us

14 கலைஞர்கள் பணம் போட்டு தயாரான ஜெய்சங்கர் திரைப்படம்!. கோபத்தால் 1000 ரூபாயை இழந்த ஸ்ரீ ப்ரியா!..

jaishankar sri priya

Cinema History

14 கலைஞர்கள் பணம் போட்டு தயாரான ஜெய்சங்கர் திரைப்படம்!. கோபத்தால் 1000 ரூபாயை இழந்த ஸ்ரீ ப்ரியா!..

Social Media Bar

Actor Jaishankar : எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களாக பலர் களம் இறங்கினர். அதில் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகியது நடிகர் சிவகுமாரும் ஜெய்சங்கரும் மட்டும்தான்.

இவர்கள் இருவருக்கும் அப்போது எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது அப்போதெல்லாம் திரைப்படங்கள் குறைந்த பட்சஜெட்டில் எடுக்கப்பட்டதால் பலரும் எளிதாக தயாரிப்பாளராக முடிந்தது. அந்த வகையில் சினிமாவில் உள்ள 14 கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தனர்.

இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் மற்றும் ஸ்ரீபிரியா முக்கிய கதாபாத்திரமாக நடித்தனர். நல்லதுக்கு காலமில்லை என்கிற அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது முதலே அங்கு எப்போதும் தாமதமாகவே வந்து கொண்டிருந்தார் நடிகர் ஜெய்சங்கர்.

ஸ்ரீ பிரியாவை பொருத்தவரை தினசரி அவர் சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பில் நடிக்க துவங்கி விடுவார். ஜெய்சங்கர் தினமும் தாமதமாக வருவதால் அவருடைய காட்சிகளை மட்டும் கொஞ்சம் தாமதமாக எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனால் கோபமான ஸ்ரீபிரியா ஒரு நாள் ஜெய்சங்கரை அழைத்து அது என்ன நீங்கள் மட்டும் எப்போதும் தாமதமாக படப்பிடிப்பிற்கு வருகிறீர்களே என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர் நாளை நான் உங்களுக்கு முன்பு படபிடிப்பிற்கு வந்து விடுகிறேன் அப்படி நான் வந்துவிட்டால் எனக்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பந்தயம் வைத்துள்ளார்.

ஸ்ரீபிரியாவும் அதற்கு ஒப்பு கொண்டுள்ளார் அதன் பிறகு மறுநாள் ஸ்ரீபிரியா வருவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே ஜெய்சங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரிடம் ஆயிரம் ரூபாயை பெற்றார் அதன் பிறகு தினசரி பட படிப்பிற்கு சீக்கிரமே வந்து சேர்ந்தார் ஜெய்சங்கர்.

To Top