News
40 வயதாகியும் இன்னமும் திருமணம் செஞ்சுக்கல… காரணம் என்ன?. உண்மையை கூறிய விஜய் பட நடிகை..!
வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலுமே வெகு காலங்களாக நடித்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் ஆரம்பத்தில் 1995ஆம் ஆண்டு மலையாள சினிமாவில்தான் முதன்முதலாக அறிமுகமானார்.
அதற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் முதன்முதலாக மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வந்து கொண்டிருந்தார்.
இதற்கு நடுவே சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அப்படியாக தமிழில் தென்றல் என்கிற சீரியலில் துளசி என்கிற கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார் நடிகை சுருதி ராஜ்.
நடிகை சுருதிராஜ்:
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து அழகு, தாலாட்டு, கண்ணான கண்ணே மாதிரியான நிறைய சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.
40 வயதை கடந்த சுருதிராஜ் இப்பொழுது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை ரசிகர்கள் பலரும் இதுகுறித்து அடிக்கடி கேள்விகளை எழுப்பி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சுருதி ராஜ் கூறும் பொழுது எல்லாத்துக்கும் காலம் அமைய வேண்டும்.
நாம் எதையும் தேடி எல்லாம் செல்ல முடியாது எனக்கு திருமணம் ஆவதற்கான காலம் நெருங்கவில்லை. எனது பெற்றோர் எனக்கு திருமணத்தை செய்து வைப்பார்கள் என்று விளக்கம் அளித்திருக்கிறார் சுருதி ராஜ்.
