News
காதலித்த பெண்ணை எப்படி.. தயங்கிய கமல்.. கெட்டவார்த்தையில் பேசுவார்.. நடிகை சுமித்ரா ஓப்பன் டாக்!..
உலகநாயகன் என்று பலராலும் அடைமொழி வைத்து அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாமல், ஹாலிவுட் வரை தன்னுடைய புகழை நிலை நிறுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.
அந்த வகையில் இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும், இவர் எழுதி நடிக்கும் கதைகளும் சற்று வித்தியாசமானதாகவும் தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் அளவிற்கு இருக்கும்.
சினிமாவில் தன்னுடைய 65 வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த கமல் தற்போது வரை முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் முன்பை விட தற்போது தான் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் கமல்ஹாசனை பற்றி பிரபல நடிகை ஒருவர் தெரிவித்திருக்கும் கருத்தானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சுமித்ரா
நடிகை சுமித்ரா மலையாள திரைப்படத்தில் வெளியான நிர்மால்யம் எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் அடைந்தவர்.

தமிழில் 1974 இல் வெளிவந்த அவளும் பெண் தானே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் சிவாஜி கணேசன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபலமடைந்தார்.
முக்கியமாக 90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
கமலை பற்றி கூறிய நடிகை சுமித்ரா
ஆரம்ப காலகட்டத்தில் கமல்ஹாசன் பல பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமித்ராவுடன் நடிக்கும் போது பல சேட்டைகளை செய்வாராம்.
சுமித்ராவும் கமலும் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்திருப்பார். இந்நிலையில் படத்திற்கு வரும் போது எல்லாம் சுமித்ரா தன்னுடைய அப்பாவை அழைத்து வருவாராம்.

இதை பார்த்ததும் கமல் “இவ வரும் போதெல்லாம் சிஐடியுடன் தான் வருவாள்” என கூறி கலாய்ப்பாரம். அப்பா இருந்தால் எந்த ஒரு சேட்டையும் செய்ய முடியாது. அப்பா இல்லை என்றால் இவர் என்னை கிண்டல் செய்து கொண்டே இருப்பார் என சுமித்ரா கூறியிருக்கிறார்.
மேலும் படப்பிடிப்பில் கமல் இருந்தாலே அந்த இடம் கல்ப கலப்பாக இருக்கும். பல கெட்ட வார்த்தைகளில் பேசி அனைவரையும் கமல் கேலி செய்வார் என சுமத்திரா கூறி இருக்கிறார்.
நானும் அவரும் சிங்காரம் வேலன் படபிடிப்பில் என்னை அம்மா என்று அழைக்காமல் சுமி சுமி என்று தான் கூறுவார். கேட்டால் இத்தனை நாளா லவ் பண்ண பொண்ணு எப்படி நான் அம்மா என்று அழைப்பது என கேலியாக பேசுவார் என சுமித்ரா கூறியிருக்கிறார்.
