Connect with us

தமன்னாவின் காதல் முறிவுக்கு காரணமாக இருந்த நடிகர்.. இது என்ன புது கதை?

Tamil Cinema News

தமன்னாவின் காதல் முறிவுக்கு காரணமாக இருந்த நடிகர்.. இது என்ன புது கதை?

Social Media Bar

நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே மிக முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். தமிழில் கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக இவர் அறிமுகமானார். இந்த நிலையில் அடுத்து நடிகை தமன்னா நடிப்பில் ஹிந்தியிலும் நிறைய திரைப்படங்கள் வர இருக்கின்றன.

தமிழில் தமன்னா நடித்த சமயத்தில் அவருக்கும் நடிகர் கார்த்திக்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு பேச்சு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த காதல் வெற்றியடையவில்லை. பிறகுதான் அதிகமாக தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார் தமன்னா.

தமன்னாவை பொறுத்தவரை இப்போது வரை மார்க்கெட் குறையாத நடிகையாகதான் இருந்து வருகிறார். இந்த நிலையில் சில காலங்களுக்கு முன்பு இவர் ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவோடு நெருக்கமான காட்சிகளில் நடித்தார் தமன்னா.

இதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் வெகு காலங்களாகவே இவர்களது காதல் இருந்து வந்தது. அதற்கு பிறகு ஜெயிலர், ஸ்திரி 2 மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அதிக கவர்ச்சியில் நடித்து வந்தார் தமன்னா.

தற்சமயம் தமன்னா அவரது காதலர் விஜய் வர்மாவோடு காதலை முறித்துக்கொண்டார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியிருக்கின்றனர்.

இதன் மூலமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. தமன்னா தொடர்ந்து கவர்ச்சியாக நடித்ததுதான் இவர்களது பிரிவுக்கு காரணம் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே வேறு நடிகருக்கும் தமன்னாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இதுக்குறித்து எதுவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவருகின்றன.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top