News
பாலிவுட் நடிகருடன் டூர் கிளம்பிய திரிஷா… ஓ இதுதான் சமாச்சாரமா?..
Actress Trisha: கனவு கன்னியாக தமிழ் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 90ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் திரிஷா என்றால் தெரியும்.
சில நடிகைகள் ஒன்று இரண்டு படங்கள் நடித்த பிறகு அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நடிகை திரை உலகில் இருப்பது பெரிய விஷயம். அதுவும் முன்னணி நடிகையாக இருப்பது என்பது சாதனை தான்
நடிகை திரிஷா
அந்த வகையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனக்கென திரையுலகில் தனி மார்க்கெட்டை வைத்திருப்பவர் நடிகை திரிஷா. தற்போது அவருக்கு 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் திரிஷா என்றும் இளமையான தோற்றத்துடனே காணப்படுகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். மேலும் சிரஞ்சீவி போன்ற பெரிய நடிகருடனும் நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
முக்கியமாக திரிஷா நடிப்பில் தமிழில் வெளியான கில்லி திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த திரைப்பம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரிஷா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை திரிஷா
இதுவரை தென்னிந்திய திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த திரிஷா தற்பொழுது பாலிவுட் பக்கம் செல்ல இருக்கிறார்.
நடிகர் அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் புதிதாக இயக்க உள்ள படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கான் நடிக்கிறார்.

இந்தப் படத்தை கரன்ஜோகர் தயாரிக்க இருக்கிறார்.
இந்நிலையில்தான் சல்மான் கானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாகவும், இதற்காக படக்குழு ஸ்பெயின் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே ஸ்பெயினில் நடைபெற இருக்கும் பட காட்சியில் திரிஷா மற்றும் சல்மான் கான் இருவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த நடிகை திரிஷா இனி பாலிவுட் சினிமாவிலும் சாதிப்பார்
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
