News
கோட் படத்தில் வந்த பஞ்சாயத்தா?.. விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்ற த்ரிஷா!..
தமிழ் சினிமா நடிகைகளில் பல வருடங்களாகவே வரவேற்பை பெற்று வரும் கதாநாயகியாக த்ரிஷா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த சாமி, லேசா லேசா மாதிரியான படங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
விஜய்யுடன் சேர்ந்து காம்போவாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அவ்வளவாக இல்லாமல் போனது. அந்த சமயங்களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக நயன் தாரா மாறினார்.
ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார் த்ரிஷா என்றே கூறலாம். மீண்டும் தொடர்ந்து பெரிய நடிகர்கள் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து த்ரிஷா குறித்து சர்ச்சைகள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே அரசியல் வாதிகள், மன்சூர் அலிக்கான் போன்ற நடிகர்கள் கூட த்ரிஷா குறித்து சர்ச்சைகளை கிளப்பி வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் த்ரிஷாவும் பேசி வந்தார். இந்த நிலையில் தற்சமயம் விமான நிலையத்தில் த்ரிஷாவை பார்த்து கில்லி மறுவெளியீடு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டப்போது அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார் த்ரிஷா.
சமீபத்தில்தான் கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியதாக கூறியிருந்தார்கள். அந்த பாடலின் படப்பிடிப்பின்போது த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் மன கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் குறித்து கேட்ட கேள்விக்கு த்ரிஷா பதில் சொல்லாமல் செல்கிறார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆனால் சொந்த பிரச்சனைகள் கூட அப்போது காரணமாக இருந்திருக்கலாம். எந்த மனநிலையில் இருந்தாலும் மைக்கை நீட்டினால் பத்திரிக்கையாளரிடம் பேச வேண்டும் என நினைப்பது தவறு என த்ரிஷா ரசிகர்கள் இதுக்குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.
