News
நான் அட்ஜெஸ்ட் பண்றத நீ எதுக்கு சூம் பண்ணி எடுக்குற.. கடுப்பான வாணி போஜன்..!
சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகைகளும் தற்போது வெள்ளித்திரை வரை பிரபலமாகி பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த வாணி போஜன் வெள்ளித்திரையில் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தன் மூலம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறார்.
இவர் சமீபத்திய சேனல் ஒன்றில் பேட்டியளித்தது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வாணி போஜன்
சின்னத்திரையில் பிரபல நடிகையாக அறியப்பட்டவர் வாணி போஜன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா என்ற தொடரில் நடித்தார்.
பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பலராலும் சத்யா என்று அறியப்பட்டார். தெய்வமகள் சீரியலின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

ஆரம்ப காலகட்டத்தில் கிங்பிஷர் ஏர்லைன்சில் பணி பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு விளம்பர படங்களில் நடித்ததன் மூலமும் சின்னத்திரையில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு என நடித்து வரும் வாணி போஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தெய்வமகள் சீரியலில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
கடுப்பான வாணி போஜன்
பிரபல சேனல் ஒன்றில் பேட்டில் கலந்து கொண்ட வாணி போஜனிடம் தொகுப்பாளர் பல புகைப்படங்களை காட்டி கேள்விகளை கேட்டு வந்தார். அப்போது வாணி போஜன் உடைகளை அட்ஜஸ்ட் செய்யும் புகைப்படங்களை சில youtube சேனல்கள் புகைப்படங்களாக வைத்து வருவதை குறித்து கேட்டார்கள்.
இதற்கு கோபமாக பேசிய வாணி போஜன் நான் என்னுடைய டிரஸ்ஸை அட்ஜஸ்ட் செய்யும்போது அவர்களுடைய கேமரா சற்று விலகி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நான் எப்பொழுது என்னுடைய உடயை அட்ஜஸ்ட் செய்வேன் என்று பார்த்துக்கொண்டு அதை படமாக எடுக்கிறார்கள்.
மேலும் youtube சேனல் என்ற பெயரில் கொஞ்சம் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். இது போன்ற புகைப்படங்களை youtube ல் போடுவதால் பார்க்கிறவர்கள் பார்க்கத்தான் செய்வார்கள். புடவை கட்டிக்கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பார்க்கிறவர்கள் பார்க்க தான் செய்கிறார்கள் என கடுப்பாக பேசி இருக்கிறார்.
