News
தல, தளபதியோடு மோத முடியாது.! – முடிவை மாற்றிய ஆதிபுருஷ் குழு
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ராதே ஷியாம் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் அடுத்த பான் இந்தியா திரைப்படமாக ஆதிபுருஷ் திரைப்படம் உள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியானது முதலே படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மிகவும் குறைந்த தரத்தில் அனிமேஷன் செய்யப்பட்டு உள்ளதால் மக்கள் பலரும் இந்த படத்தை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற பொங்கலுக்கு இந்த படத்தை இந்திய அளவில் வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. அதே சமயம் வருகிற பொங்கலை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன.
வாரிசு மற்றும் துணிவுடன் போட்டி போட்டு ஆதிபுருஷ் திரைப்படம் வசூல் சாதனை படைப்பது கடினமான காரியம். இந்திய அளவில் படம் வெளியானாலும் நடிகர் பிரபாஸிற்கு தென்னிந்தியாவில்தான் அதிக மார்கெட் உள்ளது.
எனவே இந்த படத்தை பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 6 அன்று வெளியிடலாம் என முடிவு செய்துள்ளது படக்குழு.
