அண்ணன் படத்துல நான் இல்லாம எப்டி? – வடிவேலு குறித்து பேசிய பிரபு தேவா..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற சொன்னாலே வடிவேலு என்ற பெயர் நினைவுக்கு வரும் அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் வடிவேலு.

இடையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் தற்சமயம் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். மேலும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

வடிவேலு நாய் சேகர் திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறும்போது, அந்த படத்தில் பிரபு தேவாவுடன் ஒரு பாடல் செய்யலாம் என யோசித்தார்களாம். ஏனெனில் பல படங்களில் பிரபுதேவாவும், வடிவேலும் ஒன்றாக ஆடியுள்ளனர். எனவே அப்படி ஒரு பாடலை வைப்பது நன்றாக இருக்கும் என யோசித்துள்ளனர்.

ஆனால் பிரபுதேவா இதற்கு ஒப்புக்கொள்வாரா? என சிறிய கலக்கத்துடனே அவருக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளனர். இதை கேட்டதும் “எப்போது வந்து செய்யணும்னு சொல்லுங்க.. 

அண்ணன் படத்தோட கம்பேக் ல நான் இல்லாமலா” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பிரபு தேவா. இதையடுத்து படத்தின் முதல் பாடல் பிரபு தேவா மற்றும் வடிவேலு சேர்ந்து ஆடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

Refresh