Actress
எனக்கு எண்டே கிடையாது? – ரீ எண்ட்ரி கொடுத்த சமந்தா!
தமிழின் முக்கியமான நடிகைகளில் சமந்தாவும் ஒருவராவார். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவிலேயே நடிகையானவர் சமந்தா.

பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்தபோது சமந்தா அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நான் ஈ திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஏனெனில் அந்த படத்தின் மொத்த கருவும் கதாநாயகியை கொண்டே சென்றது என்பதே அதற்கு முக்கிய காரணம்.

அதற்கு பிறகு பள்ளி பெண்ணாக நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் நடித்து அனைத்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இதயத்தை கொள்ளை கொண்டார் சமந்தா. அதை தொடர்ந்து விஜய்யுடன் மூன்று படங்கள் நடித்தார்.

தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நல குறைப்பாடு ஏற்பட்டு அதனால் சினிமாவில் பல வாய்ப்புகளை கைவிட்டார் சமந்தா.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின் காரணமாக அவரது உடல் மெலிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமந்தா வெகு நாட்களுக்கு பிறகு தற்சமயம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் உடல் மெலிந்து இருப்பது தெரிகிறது. அவர் கைகளில் நரம்புகள் வெளியே தெரிவதை படத்தில் காணலாம். ஆனால் கண்டிப்பாக சமந்தா உடல் நலம் சரியாகி மீண்டும் வந்து நடிப்பார் என ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
