Cinema History
படத்துல மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒருத்தனை பிரிச்சி எடுத்துருக்கேன்? – ஓப்பன் டாக் கொடுத்த விஜய்!
பொதுவாக கதாநாயகன்கள் என்றாலே படத்தில் பல பேரை ஒரே ஆளாக நின்று அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் அந்த மாதிரியான சாகசங்களில் ஈடுபடுவதில்லை.

ஏனெனில் நிஜ வாழ்க்கையில் ஒரு மனிதன் பலரை அடிப்பதற்கான சாத்தியம் என்பது மிக குறைவே. ஆனால் தளபதி விஜய் நிஜ வாழ்க்கையிலும் கூட அப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
விஜய் கல்லூரி படித்த காலக்கட்டத்தில் சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்தார். அந்த சமயத்தில் கல்லூரி மாணவர் மாணவிகளுடன் ஒரு சுற்றுலா சென்றுள்ளனர். இரயிலில் சுற்றுலா சென்றுக் கொண்டுள்ளபோது அங்கு வந்த 4 இளைஞர்கள் விஜய்யின் கூட படிக்கும் பெண்களை கலாய்த்துள்ளனர்.
இதனால் கோபம் கொண்ட விஜய் அவரது குழுவை அழைத்து சென்று அந்த நான்கு பேரையும் ஒரு கை பார்த்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய அந்த குழு படத்தில் வருவது போலவே அடுத்த ஸ்டாப்பில் ஆட்களை சேர்த்துக்கொண்டு நின்றுள்ளனர்.
விஜய் பக்கம் மொத்தமே 10 பேர்தான் இருந்துள்ளனர். ஆனால் எதிர்தரப்பில் 40 பேர் இருந்துள்ளனர். அப்போதும் விட்டுக்கொடுக்காமல் சண்டையில் இறங்கியுள்ளார் தளபதி. படமாக இருந்தால் 50 பேரை கூட அடிக்கலாம்.
ஆனால் நிஜ வாழ்க்கை அல்லவா? அதனால் விஜய்யும் அவரது நண்பர்களும் கட்டு போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்துள்ளனர். இருந்தாலும் 40 பேரை எதிர்க்கும் துணிவு விஜய்க்கு இளமை காலங்களிலேயே இருந்துள்ளது.
இந்த நிகழ்வை விஜய் சன் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
