Connect with us

தமிழில் நல்ல படங்கள் வராமல் போனதுக்கு கமலின் விக்ரம் திரைப்படம்தான் காரணம்!.. வெளிப்படையாக கூறிய நடிகர்!.

kamalhaasan chitra lakshmanan

News

தமிழில் நல்ல படங்கள் வராமல் போனதுக்கு கமலின் விக்ரம் திரைப்படம்தான் காரணம்!.. வெளிப்படையாக கூறிய நடிகர்!.

Social Media Bar

Kamal vikram : தற்சமயம் நிலவரப்படி தெலுங்கு சினிமாவை விட மோசமான ஒரு நிலைக்குதான் தமிழ் சினிமா சென்று கொண்டுள்ளது என்பது பலரது வாதமாக இருக்கிறது.

1990கள் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான திரைப்படங்கள் வந்தாலும் அதை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருந்தனர். எனவே அப்பொழுது புது புது வகையான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது தொடர்ந்து அதிக வன்முறை கொண்ட அதிக ஆக்சன் காட்சிகள் கொண்ட திரைப்படங்களைதான் மக்கள் விரும்புகின்றனர்.

இதனால் பெரும் நடிகர்கள் கூட தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களிலேயே நடித்து வருகின்றனர். முக்கியமாக லோகேஷ் கனகராஜ் மாதிரியான இயக்குனர்கள் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களை எடுத்து அதன் மூலம் வெற்றியை கொடுத்ததே இதற்கு முக்கிய காரணம்.

இப்போது மற்ற இயக்குனர்களும் அதையே பின்பற்ற துவங்கிவிட்டனர் யூட்யூப் தளத்தில் சித்ரா லட்சுமணனிடம் ஒரு நபர் இதுக்குறித்து கேட்கும் பொழுது கேரளாவில் வந்த நெரு திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது தமிழில் ஏன் அப்படியான திரைப்படங்கள் வரவில்லை என கேட்டிருந்தார்.

நெரு என்னும் திரைப்படம் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் 18 கோடிக்கு எடுக்கப்பட்டு 80 கோடி வெற்றி கொடுத்த திரைப்படமாகும்.   விக்ரம் திரைப்படம் 400 கோடி வெற்றியை கொடுத்த பிறகு அதைவிட அதிக வெற்றி கொடுக்கும் திரைப்படங்களை எடுக்கத்தான் இயக்குனர்கள் நினைக்கிறார்கள். எனவேதான் இது மாதிரியான நல்ல படங்கள் தமிழில் வருவதில்லை என வெளிப்படையாக கூறியிருந்தார்.

Source – Click here

To Top