News
கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு!.. அமைச்சர் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!..
Aishwarya Rajesh: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாராவை போலவே இவரும் தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் சினிமாவில் இவர் பெரிய மார்க்கெட்டை பிடிக்கவில்லை.
சமீபத்தில் இலங்கையில் நுவரெலியா என்னும் பகுதியில் மாபெரும் பொங்கல் விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு பல பிரபலங்கள் வருகைப்புரிந்திருந்தனர். இதில் திரைப்பிரபலங்களாக சில நடிகைகளும் கலந்துக்கொண்டனர். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா மாதிரியான நடிகைகளும் கூட கலந்துக்கொண்டனர்.

இவர்களை எல்லாம் அமைச்சர் ஜீவன் தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். இந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது ஜீவன் குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது “நான் நினைத்ததை விடவும் பொங்கல் பண்டிகை சிறப்பாக சென்றது. அமைச்சர் என்றதும் மிகவும் வயதான நபராக இருப்பார் என்று நினைத்தேன்.
ஆனால் இந்த அமைச்சர் வயது குறைவானவராக இருக்கிறார். ரொம்ப அழகாகவும் இருக்கிறார். முதல் முறையாக குறைவான வயதில் ஒரு அமைச்சரை பார்க்கிறேன். அமைச்சர் ஜீவன் பலருக்கும் நல்ல உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது என அவரை குறித்து பேசியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மேலும் பேசும்போது எனக்கும் திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என கூறியுள்ளார்.
