News
தனுஷோட அப்படி பண்ண சொன்னாங்க… இந்த சினிமா தேவையான்னு நினைச்சேன்.. மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா ரகுபதி!.
சினிமாவில் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் கிடைப்பது என்பது பல சுவாரசியமான நிகழ்வுகளை கொண்டு நடக்கிறது. அந்த வகையில் ஒரு சில நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்வதன் மூலம் பிரபலம் அடைந்து வெள்ளித்திரையில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
மேலும் youtube சேனல் மூலம் சேனல் ஒன்றை நடத்தி அதன் மூலமும் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறார்கள். அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்கள், இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற பல வழிகளில் தங்களின் திறமைகளை காட்டி பல நடிகைகளும் வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில், பிரபல youtube சேனல் ஆங்கர் மற்றும் தொகுப்பாளினியாக இருக்கும் ஐஸ்வர்யா ரகுபதி கேப்டன் மில்லர் படப்பிடிப்பின் போது அவருக்கு நடந்த சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ரகுபதி
சில நாட்களுக்கு முன்பு இணைதளத்தில் அதிகமாக பேசப்பட்ட நபர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ரகுபதி இருக்கிறார். இவர் பிரபல youtube சேனலில் தொகுப்பாளராகவும், பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கூட கேப்டன் மில்லர் பட விழாவின்போது இவரிடம் ஒரு நபர் அத்துமீறியதாக கூறப்பட்டது.
மேலும் ஐஸ்வர்யா ரகுபதி அத்துமீறிய அந்த நபரை அங்கேயே அடி வெளுத்து வாங்கிவிட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில் ஐஸ்வர்யா ரகுபதியை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் ஒரு சிலர் இவர் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்கிறார் எனவும் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.

இதற்கு முன்பாக நடிகர் மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கூல் சுரேஷ் அத்துமீறி, ஐஸ்வர்யா ரகுபதி கழுத்தில் மாலை போட்டார். இது ஐஸ்வர்யாவுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் கூல் சுரேஷ் ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது ஐஸ்வர்யா பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார்.
தனுஷ் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ரகுபதி
கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் ஒரு பாடலில் நடனம் ஆடும் போது, ஏற்பட்ட சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார். இவருக்கு கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்த போது மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும், 40 நாட்கள் படத்திற்கான கால்ஷீட் வாங்கியதாகவும் கூறினார்.
முதல் நாள் ஷூட்டிங் சென்றவுடன் அங்கு பல பெண்கள் என்னை போலவே பல கனவுகளுடன் இருந்தார்கள். மேலும் அவர்களை எல்லாம் நான் பார்த்துவிட்டு எனக்கெல்லாம் நடிக்க வருமா, நான் இதற்கு செட்டாகுவேனா என பல கேள்விகள் எனக்கு தோன்றியது. மேலும் எனக்கு பயமாகவும், படபடப்பாகவும் இருந்தது.
அதன் பிறகு தனுஷ் உடன் அருகில் நடனம் ஆட வேண்டும் என கூறினார்கள். நடனம் ஆட வேண்டும் என்ற உடனே எனக்கு மிகவும் பயம் ஏற்பட்டது. பாபா மாஸ்டர் ஒருபுறம் நடனம் சொல்லிக் கொடுத்திருக்கும் போதே நான் கடவுளை திட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு இதெல்லாம் தேவையா? என்னை இப்படி மாட்டி விட்டாயே? என்றெல்லாம் கூறி மனதிற்குள்ளேயே புலம்பி கொண்டிருந்தேன். ஆனால் சரியாக ஆடி முடித்து விட்டேன். இதை என் வாழ்வில் மறக்க முடியாது என அவர் கூறினார்.
