Actress
நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது!.. மாடர்ன் லுக்கில் அசத்தும் போட்டோஸ்!.
கலைஞர் டிவியில் வெளியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கருப்பாக இருந்தாலும் கூட திரைத்துறையில் நிறத்தை தாண்டி நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என நம்பினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அட்டக்கத்தி, ஆச்சரியங்கள் மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ரம்மி திரைப்படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் மாதிரியான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அவருக்கு அதிகமான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் சட்டை போட்டுக்கொண்டு இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
